திருப்பணமூர் கிராமம்

திருப்பணமூர், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், திருப்பனமூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். திருப்பணமூரும்-கரந்தையும் இரட்டைக் கிராமங்கள் ஆகும். இது காஞ்சிபுரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கரந்தைக்கு அருகில் திருப்பணமூரில் கல்வெட்டுக்கள் கொண்ட சமணக் கோயில்கள் உள்ளது. இவ்வூரில் பிறந்த அபிநந்தன் எனும் இந்திய வான்படையின் அதிகாரி 2021-இல் வீர் சக்கரம் விருது பெற்றவர். [1]மேலும் அபிநந்தனின் தந்தையும், இந்திய வான்படையின் ஏர் மார்ஷலாக இருந்து ஓய்வு பெற்றவருமான சிம்மக்குடி வர்த்தமான் திருப்பணமூரில் பிறந்தவராவார்.

திருப்பணமூர் கிராமத்தில் சமண சமயத் தீர்த்தங்கரர் புஷ்பதந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது.[2][3] இவ்வூர் சமணத் துறவியும், அறிஞருமான அகலங்கரின் பிறப்பிடமாகும். இவ்வூரில் தர்ம சாகர், சுதர்ம சாகர், கஜபதி சாகர் ஆகிய சமணத் துறவிகள் சல்லேகனை செய்து முக்தி பெற்றனர்.

கரந்தை திகம்பர சமணக் கோயில் வளாகம்
திருப்ப்பணமூர் திகம்பர சமணக் கோயில்

சிறப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பணமூர்_கிராமம்&oldid=3834834" இலிருந்து மீள்விக்கப்பட்டது