திருமணம் பற்றிய பெரியார் ஈ.வெ.இரா வின் கருத்துக்கள்

பெரியார் ஈ.வெ.இரா திருமணம் குறித்து சமகாலத்து முறைகளுக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர். தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிமுகப்படுத்தியவர்.

பகுத்தறிவுத் திருமணம் தொகு

இன்ன அவசியத்திற்கு, இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச் (சடங்குகளை) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவுத் திருமணம் ஆகும்.

சுதந்திரத் திருமணம் தொகு

சுதந்திரத் திருமணம் என்பது மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் ஆகும்.

புரட்சித் திருமணம் தொகு

புரட்சித் திருமணம் என்பது தாலி கட்டாமல் செய்யும் திருமணம் ஆகும்.

சிக்கனத் திருமணம் தொகு

சிக்கனத் திருமணம் என்பது ஆடம்பர காரியங்கள் தவிர்க்கப்பட்டு சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது ஆகும்.

சுயமரியாதைத் திருமணம் தொகு

சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனரைப் புரோகிதராக வைத்து நடத்தாத திருமணம் ஆகும்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. கி.வீரமணி (2002). பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி. 55: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 89.{{cite book}}: CS1 maint: location (link)
  2. பெரியார் ஈ.வெ.இரா (மார்ச் 1950). [www.viduthalai.in "சித்திர புத்திரன்"]. விடுதலை நாளிதழ் (14.3.1950). doi:14.3.1950. www.viduthalai.in.