திருவண்ணாமலை பெருநகராட்சி

திருவண்ணாமலை மாநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும். சனவரி 12 , 1866 அன்று இது உருவாக்கப்பட்டது. இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 2, 1865ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 21 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயற்பட்டது. இது திருவண்ணாமலை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயற்பட்டது.

  • திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது .
  • 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,
  • 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது .
  • 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக ,
  • 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"(பெருநகராட்சி) யாகவும் தரம் உயர்த்தப்பட்டது .
  • 2024 இருந்து திருவண்ணமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

திருவண்ணாமலை பெருநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது தொகு

ஆண்டு முந்தய
நகராட்சியின் நிலை
தற்பொழுதய
நகராட்சியின் நிலை
கோட்டம் 1941 17 39
மக்கள் தொகை 1941 36 ஆயிரம் 1.75 இலட்சம்
பரப்பளவு 1941 2.3 ச.மைல் 14 ச.கி.மீ