திலகன்

இந்திய நடிகர்

சுரேந்தரநாத் திலகன் (மலையாளம்: സുരേന്ദ്രനാഥ തിലകന്‍; செப்டம்பர் 12, 1938 - செப்டம்பர் 24, 2012) பரவலாக அறியப்பட்டது திலகன், இருநூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள ஓர் இந்திய திரைப்பட நடிகரும் நாடக நடிகரும் ஆவார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்று இந்தியத் திரைப்படத்துறையில் பரவலாகப் பாராட்டப்பட்டவர்.[2][3] 2009ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.[4]

திலகன்
பிறப்புசுரேந்திரநாத் திலகன்
(1938-09-12)செப்டம்பர் 12, 1938 [1]
அய்ரூர், திருவாங்கூர்
இறப்புசெப்டம்பர் 24, 2012(2012-09-24) (அகவை 74)
செயற்பாட்டுக்
காலம்
1979 – 2012

ஆகத்து 21, 2012 அன்று புதிய திரைப்படமொன்றின் படப்பிடிப்புத் தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து திருச்சூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இரண்டு மாரடைப்புகளைக் கடந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, இதய நோய் தவிர, குளிர்சுரமும் (நியுமோனியா) ஏற்பட்டுள்ளது. எனவே செயற்கை மூச்சியக்கக் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் செப்படம்பர் 24,2012 அன்று சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமையில் காலை 3 மணிக்கு இறந்தார்.[5][6]

நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் தொகு

மேற்கோள்களும் குறிப்புக்களும் தொகு

  1. "Thilakan Biography". One India Entertainment. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 28, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.
  3. http://www.rediff.com/movies/2008/jan/25thi.htm
  4. Press Information Bureau English Releases
  5. திலகன் காலமானார் நியூ இண்டியன் எக்சுபிரசு
  6. திலகன் காலமானார் விகடன்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலகன்&oldid=3791450" இலிருந்து மீள்விக்கப்பட்டது