தில்லி-6 (இந்தி: दिल्ली 6) என்பது ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா தயாரித்த ஒரு ஹிந்தி திரைப்படமாகும்; அதில் அபிஷேக் பச்சன், சோனம் கபூர், ஓம் பூரி, வஹீதா ரஹ்மான், ரிஷி கபூர், அதுல் குல்கர்னி, தீபக் தோப்ரியல் மற்றும் திவ்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.[2] இந்தப்படமானது பழைய தில்லியில் உள்ள சாந்தினி சௌக் எனப்படும் இடத்தில் மெஹ்ரா வாழ்ந்து வளர்ந்த நாட்களைக்குறிக்கும் படமாக அறிக்கைகளில் வெளிவந்துள்ளன.[3] ஏகேஎஸ் மற்றும் ரங் தே பசந்திக்குப் பிறகு மெஹ்ராவின் மூன்றாவது படமாகும். இந்தப்படமானது 20 பெப்ரவரி 2009 அன்று ஒரு வலிமையான பாக்ஸ் ஆபீஸ் வசூலுடன் துவங்கியது, ஆனால் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து ஒன்றுகலந்த விமரிசனமே அடையப்பெற்றது.

தில்லி 6
இயக்கம்Rakeysh Omprakash Mehra
தயாரிப்புRonnie Screwvala
கதைRakeysh Omprakash Mehra
Prasoon Joshi
Kamlesh Pandey
இசைA.R. Rahman
நடிப்புAbhishek Bachchan
Sonam Kapoor
Waheeda Rahman
Om Puri
Rishi Kapoor
Divya Dutta
Prem Chopra
Atul Kulkarni
Deepak Dobriyal
Cyrus Sahukar
Amitabh Bachchan
ஒளிப்பதிவுBinod Pradhan
படத்தொகுப்புP S Bharthi
விநியோகம்UTV Motion Pictures
வெளியீடு2009-02-20
ஓட்டம்138 minutes [சான்று தேவை]
நாடு இந்தியா
மொழிHindi
மொத்த வருவாய்US$ 13,125,579 (worldwide)[1]

கதைச் சுருக்கம் தொகு

ரோஷன் (அபிஷேக் பச்சன்) தனது இறக்கும் தருவாயில் உள்ள பாட்டி அன்னபூர்ணாவுடன் (வஹீதா ரஹ்மான்) அவர்களுடைய மூதாதையர் வழிச் சொத்துக்களை பார்வையிட மக்கள் கூட்டம் நிறைந்த தில்லிக்கு வருகிறார். ஆரம்பத்தில் அவர்களுடைய அண்டை அயல் வீட்டுக்காரர்களின் கிறுக்குத்தனமான கூட்டத்தைக் கண்டு ரோஷன் மிகவும் திகைப்படைகிறார்: புத்துணர்வு மனிதன் அலி பைக் (ரிஷி கபூர்), பரம்பரை பரம்பரையாக சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் மதன்கோபால் (ஓம் பூரி) மற்றும் ஜெயகோபால் (பவன் மல்ஹோத்ரா) போன்ற சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினர், மாம்டு (தீபக் தோப்ரியல்)ஹல்வாய் , கோபர் (அதுல் குல்கர்னி) என்ற மும் மூடர்கள், சேத்ஜி மற்றும் பலர். இருந்தாலும், படிப்படியாக அந்த சூழ்நிலை மனதில் சொல்லவொண்ணா பாதிப்புகளை ஏற்படுத்தியதோடு, மேலும் மனதில் ஆழத்தில் பதிந்த சமுதாய உணர்ச்சிகளின் தாக்கங்கள் காரணமாக ரோஷன் அவற்றில் ஒன்றி விடுகிறான். பாட்டியுடன் "ராம் லீலா" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கிடைத்த மன அமைதி, மாம்டுவுடன் மிட்டாய்க் கடையில் அடித்த கோட்டம், குழந்தைகளுடன் விளையாடும் பொழுது கிடைத்த கரை புரண்ட உல்லாசம், அனைத்தும் மனதுக்குள் இதமாக வலம் வந்தன, மற்றும் அவ்விடத்து மரபுகளுடன் படிப்படியாக பொருத்தமாகி ஒன்றிவிடுகிறார்.

மேலும் ரோஷன் மெதுவாக வாழ்க்கையின் சில வகை உண்மை நிலவரங்களை நேருக்கு நேர் அறிந்துகொள்கிறார். சர்க்கரை வியாதியால் அவதியுற்ற பாட்டியை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேளையில், மனம் பதட்டத்துடன் இருக்கையில், குறுக்கே எதிர்பாராதவிதமாக ஒரு பசு மாடு பிரசவ வேதனை கண்ட நேரம் பார்த்து ஊர் மக்கள் சூழ்ந்து பசுவிற்கு சடங்கு செய்வதற்கு முற்படுவதால் போக்கு வரத்து சில நேரம் தடை பட்டு போவதும், அந்த நிலைமையிலும் அவன் பாட்டி பசு மாட்டை பய பக்தியுடன் வணங்குவதும், அனைத்தும் ஒரு கட்டுப் பாடில்லாத போக்கை மிகையாக சுட்டியது.; இருந்தாலும், மேலும் உள்ளூர் காவல் துறையினர் இவ்விதமான வழக்கங்களை ஆதரிப்பதை கண்ணுற்று மிகவும் ஆச்சரியமடைகிறார். ரோஷன் சமுதாயத்தில் காணப்படும் வழிவழிப்பகைகள் மற்றும் சமூக இடர்பாடுகளைப்பற்றி நன்றாகவே தெரிந்து கொள்கிறார். மதன்கோபாலின் தங்கை ரமா (அதிடி ராவ் ஹைதரி) திருமண வயதைத் தாண்டியும் இன்னும் மணமாகாமல் இருப்பது (சமூகம் இதை ஒரு இழுக்காக கருதுகிறது) மற்றும் ஜெயகோபாலின் மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழில் எங்குமே செல்லாமல் வருந்த வைப்பது. ஒழுக்கமற்ற வயதான பழைய உள்ளூர் வட்டித் தொழிலர் லாலா பைராம் (பிரேம் சோப்ரா) ஒரு இளம் வயதினளை மணப்பது, மேலும் அவள் தன் சுற்றுக்கு, ஓர் இளம் வயதினனான சுரேஷ் (சைரஸ் சாஹுகர்)என்ற ஒளிப்பட நிலைய கையாளுடன் உறவு வைத்திருப்பது போன்ற வகைபாடுகள். அதே நேரத்தில் சுரேஷ் சூழ்ச்சி செய்பவனாக மதன்கோபாலின் பெண் பிட்டு (சோனம் கபூர்) மீதும் ஒரு கண் வைத்திருக்கிறான். பிட்டு மனதார பழங்கால பாரம்பரியத்தில் ஊறியிருக்கும் பழைய தில்லியை விட்டுப்போக நினைக்கிறாள்; அவள் இரகசியமாக மிகவும் பிரபலம் அடைந்த உண்மை நிலவர காட்சியான இந்தியன் ஐடல் என்ற நிகழ்ச்சிக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு பங்கேற்க நினைக்கிறாள், அப்படியாவது மும்பைக்கு செல்வதற்கான அவள் ஆசையை வெல்லப்பார்க்கிறாள். அலி பேக் என்பவரின் பரந்த மனப்பான்மை ரோஷனை மிகவும் கவருகிறது, ஒரு காலத்தில் அவர் தமது அன்னை மீது மையல் கொண்ட காரணத்திற்காக இது வரை அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவர் நெஞ்சை நெகிழ வைக்கிறது. ரோஷன் கீழ் ஜாதியை சார்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக குப்பை பொறுக்கும் பெண்ணான ஜலேபியை (திவ்யா தத்தா), சமூக நிகழ்வுகளில் ஒதுக்கியும் விலக்கியும் வைக்கும் அதே சமூகம், சில காட்டுமிராண்டிகள் அவளை அடைவதற்கு அவளை பல வகைகளில் துன்புறுத்துவதை கண்டும் காணாமல் இருப்பது கண்டு பச்சாதாபம் கொள்கிறார். தனது அதிகாரபலத்தை உள்ளூர் மக்கள் மீது துஷ்பிரயோகம் செய்யும் போக்கிரியான இன்ஸ்பெக்டர் ரன்விஜயின் பாதையிலும் ரோஷன் குறிக்கிடுகிறார். அவ்வூரின் மன்ற உறுப்பினராக விளங்கும் ஒரு பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் ரன்விஜய் மிகவும் நெருக்கம் கொள்கிறான், அந்த பெண்ணோ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவதையே பெரிதாக நினைக்கிறாள்.

இது இப்படி இருக்கையில், தகவல் ஊடகங்கள் "காலா பந்தர் (கருப்பு குரங்கு)" என்ற பீதி அடையவைக்கும் பயங்கரத்தைப் பற்றிய கதைகளை பெரிது படுத்தி மக்கள் இடையே பீதியை கிளப்பி விடுகின்றன. இந்த துஷ்டன் (படத்தில் அவனைப்பற்றி தெளிவாக விளக்கவில்லை) மக்களை தாக்குகிறான், பல விதமான பொருட்களை திருடுகிறான் மேலும் சில சூதுவாதறியாத மக்களை கொன்று குவித்திருக்கிறான். (இந்த இறப்புகளில் மிகையானவை விபத்துகளினால் ஏற்பட்டவை, எடுத்துக்காட்டாக கர்பமாக இருக்கும் ஒரு குடும்பத்தலைவி எதிர்பாராமல் ஒரு நிழல் உருவத்தைக்கண்டு பீதி அடைந்து மாடிப்படிகளில் இருந்து கீழே உருண்டு விழுந்து மரணம் அடைதல் அல்லது துரதிர்ஷ்டவசமாக ஒருவன் மின்சாரக்கம்பிகளை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து இறந்தது போன்றவை.) இருந்தாலும், உள்ளூர் செய்தி ஊடகங்கள் காலா பந்தரின் ஒவ்வொரு செயல்களையும் நிகழ்வுகளையும் பொறுக்கி எடுத்து அவனுடைய அருஞ்செயல்களை கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டு மேலும் ஊதிவிட்டனர். ஜெயகோபால், தன்னைத்தானே வல்லவனாக பிரகடனப்படுத்திக்கொண்ட மின்சாரமேதை, காலா பந்தர் (அவனுடைய பலியாடுகளை கொல்வதற்காக) தன் உடலில் ஒரு மின்சார சுற்றை பொருத்திக் கொண்டிருப்பதாகவும் மேலும் தண்ணீர் மூலமாகவும் மின்சாரத்தை பாய்ச்சலாம் என்ற தத்துவத்தை வெளியிட்டதோடு; இந்த வதந்தி காட்டுத்தீயைப் போல் உள்ளூர் முழுவதும் பரவியது.

இப்படி இந்த கதை பல திருப்பங்களை சுற்றி வருகிறது. முதலில் கொஞ்சம் காரசாரமாக இருந்த பின், ரோஷன் மற்றும் பிட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர். மதன்கோபாலின் ஏற்பாட்டின்படி பிட்டுவை பெண் பார்க்கும் படலத்தின்போது, ரோஷன் குறிக்கிடுகிறார். அந்நேரத்தில் அவர் பிட்டுவின் தீராத நீண்ட கனவுகளைப்பற்றி எதிரொலிக்க, பெண்ணை பார்க்க வந்தவர்கள் ஓடிப்போய் விடுகிறார்கள் அதனால் மதன்கோபாலின் விரோதத்தை அவர் சம்பாதித்துக்கொள்கிறார். அவர் படிப்படியாக பிட்டு மீது காதல் வயப்படுகிறார், ஆனால் பிட்டு சுரேஷை விரும்புவதாக கூறுவதால் குழப்பம் நிலவுகிறது (அவன் அவள் கனவுகளை நனவாக்குவான் என்றே நம்புகிறாள்). இந்த நேரத்தில், காலா பந்தர் பழைய தில்லியில் தனது தாக்குதலை நடத்துகிறது. காலா பந்தரின் தீய சக்திகளை விரட்டுவதற்காக உள்ளூரில் வசிக்கும் வெகுளியான மக்கள் தான்த்ரிக் சனி பாபா -வின் உதவியை நாடுகின்றனர். நீண்ட நேரமாக நடத்திய ஒரு ஹோம சடங்கிற்குப் பிறகு, தான்த்ரிக் பாபா ஒரு சேதமடைந்த கோவிலை சுட்டிக்காட்டி, அதனை இடித்து அதன் இடத்தில் எழுப்பிய புதிய பள்ளிவாசலின் காரணமாகத்தான், காலா பந்தரின் தீய சக்திகள் தூண்டப்பட்டதாக சுட்டிக்காட்டுகிறார். இதனால் இது வரை இசைவிணக்கத்துடன் வாழ்ந்து வந்த ஹிந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே பிளவு ஏற்படுகிறது. துவக்கத்தில் அமைதியாக நடைபெற்ற ஆர்பாட்டங்களுக்குப் பிறகு (திரளணிகள் மற்றும் ஆவேசத்துடன் கூட்டிய கூட்டங்கள்), மக்களின் முரட்டுக்கூட்டம் கலவரத்தில் ஈடுபடுகின்றனர் மற்றும் சில உள்ளூர் சாலைகளை சேதப்படுத்துகின்றனர். மாமடு (மரத்திலான) மரக்கோவிலுக்கு தீ வைக்கிறான். ரோஷன் அவர்களிடம் அமைதி காண விழைகிறார், ஆனால் அவருடைய பெற்றோர் கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்ததால், அவருடைய செய்கைகள் வரவேற்கப்படவில்லை. உள்ளூர் மக்கள் இறுதியில் காலா பந்தர் அங்கிருக்கும் சூனி கல்லியில் (தீய சக்திகள் நிறைந்ததாக கருதப்படும் ஒரு இருட்டான சாலை) மறைந்து இருப்பதாக என்ற உண்மை நிலவரத்தை ஒப்புக் கொள்கிறார்கள் மேலும் அதனை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வெகுளியான கோபரிடம் அந்த எதிரி சைதானிடமிருந்து ஒரு கற்றை தலைமுடியை பிடுங்கி எடுத்துவருமாறு உத்தரவிடுகிறார்கள் மேலும் அதை தான்த்ரிக் தீயில் இட்டு கருகவைத்து தீய சக்திகளை எரிப்பதோடு பேய் ஒட்டுதலும் நிறைவு பெறும்.

ரோஷன், பிட்டு சுரேஷுடன் ஓடிப்போகும் திட்டத்தைப்பற்றி அறிந்து கொள்கிறார், மேலும் சுரேஷ் ஒரு இரு நிலை கொண்ட சந்தர்ப்பவாதி என்பதையும் உணர்ந்து கொள்கிறார். அவர் ஒரு குரங்கின் முகமூடி மற்றும் வேடம் அணிந்து கூரைகளுக்கு இடையே தாவிக்கொண்டு திருட்டுத்தனமாக பிட்டுவை பின் தொடர்ந்து செல்கிறார். இதற்கிடையே கோபர் சூனி கல்லிக்குள் நுழைகிறான் மேலும் அங்கே ஜலேபி அவனிடம் தன்னுடைய தலைமுடிக்கற்றை வெட்டிக்கொடுத்து, அவனை வெற்றிகரமாக திரும்பி செல்லவும், மீண்டும் சமூகத்தினரிடையே சுமூகம் நிலவும் நோக்கத்துடனும் அனுப்புகிறாள். அந்த சமயத்தில், ரோஷன் (அவருடைய குரங்கு வேடத்தில்) பிட்டு மற்றும் சுரேஷ் சந்திக்கும்போது குறிக்கிடுகிறார் மேலும் அதைக்கண்டு பயந்தாங்கொள்ளியான (கோழையான) சுரேஷ் அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போய்விடுகிறான். ரோஷன் தனது வேடத்தை கலைக்கும் முன்னரே, பிட்டு கலவரம் அடைந்து கத்துகிறாள் மேலும் அதனால் ஊர் மக்கள் அங்கே படையாக திரள்கின்றனர். மக்கள் ரோஷன் தான் காலா பந்தர் என்று நம்பி, அவர்கள் அனைவரும் அவரை ஒரு அங்குலத்திற்கும் கூட இடைவெளி விடாமல் அடித்து நொறுக்குகின்றனர் மேலும் மாமடு அவரை சுட்டு விடுகிறான். அப்போது, கோபர் அங்கே வந்து காலா பந்தரின் உண்மை நிலவரத்தை உணர்த்துகிறான்; காலா பந்தர் என்பது தில்லி 6 மக்களின் ஆத்மாவில் உறங்கிக்கிடக்கும் ஓர் பிரச்சினையின் உணர்வேயாகும் மேலும் அதனை அவ்வூர் மக்களே அவர்களுக்குள்ளாக வெற்றி காண வேண்டும்.

நடிப்பு தொகு

  • அபிஷேக் பச்சன் ரோஷனாக
  • சோனம் கபூர் பிட்டுவாக
  • வஹீதா ரஹ்மான் அன்னபூர்ணாவாக (பாட்டி)
  • ரிஷி கபூர் அலியாக
  • ஓம் பூரி மதன்கோபாலாக
  • திவ்யா தத்தா ஜலேபியாக
  • தன்வி அஸ்மி பாதிமாவாக
  • அதுல் குல்கர்னி கோபராக
  • அதிடி ராவ் ஹைதாரி ரமா புவாவாக
  • சுப்ரியா பாதக் விமலாவாக
  • தீபக் தோப்ரியல் மாம்டுவாக
  • கே.கே. ரைனா ஹாஜி சுலாமானாக
  • பவன் மல்ஹோத்ரா ஜெய் கோபாலாக
  • அமிதாப் பச்சன் தாத்தாவாக
  • விநாயக் டோவல் பாபியாக
  • பிரேம் சோப்ரா லாலா பைரமாக
  • விஜய் ராஸ் இன்ஸ்பெக்டர் ரன்விஜயாக
  • சைரஸ் சாஹுகார் சுரேஷாக
  • ஹசன் சாத் பிஷமாக

[4][5][6][7]

குழு தொகு

  • இயக்குனர்: ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா
  • தயாரிப்பாளர்: ரோண்ணீ ஸ்க்ரூவாலா மற்றும் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா
  • ஆக்கத் தயாரிப்பாளர்: பி.எஸ்.பாரதி
  • இசை: ஏ.ஆர். ரஹ்மான்
  • ஒளிப்பதிவு இயக்குனர்: பினோத் பிரதான்
  • வசனம் மற்றும் பாடல்கள்: பிரசூன் ஜோஷி
  • திரைக்கதை: ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா, கமலேஷ் பாண்டே மற்றும் பிரசூன் ஜோஷி
  • தொகுப்பாளர் : பி. எஸ்.பாரதி
  • தயாரிப்பு வடிவமைப்பு : சமீர் சந்திரா
  • நடவடிக்கை : அல்லன் அமின்
  • ஒலி வடிவமைப்பு: நகுல் காம்தே
  • நடன வடிவமைப்பு: வைபவி மெர்ச்சன்ட், சரோஜ் கான்
  • ஆடைகள் வடிவமைப்பு: அர்ஜுன் பாசின், அனாமிகா கன்னா
  • சி ஏ : பிமல் பரேக்
  • இணை தயாரிப்பு: பி.எஸ்.பாரதி, சரீனா மேஹ்தா, தேவென் கோடே மற்றும் சித்தார்த் ராய் கபூர்
  • ஒப்பனை: விக்ரம் கேக்வாத்
  • சிகை அலங்காரம்: அவன் கண்ட்ராக்டர் சரீனா
  • வரிசை தயாரிப்பாளர்: உர்பி கஸ்மி
  • முதல் துணை இயக்குனர்: ரேபெக்க ஸ்ட்டிறிக்லான்ட், சந்தீப் மோடி, நேஹா கவுள்
  • தயாரிப்பு கட்டுப்பாட்டு அலுவலர்: சையத் அபுல் எஹ்சான்
  • தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: விராஜ் கவாஸ்

தயாரிப்பு தொகு

மேம்பாடு மற்றும் வார்ப்பு தொகு

படப்பிடிப்புக்கான ஆரம்ப நாட்களில் ராகேஷ் தனது அடுத்த படத்தில் முற்றிலும் புதிய முகங்களையே அறிமுகப்படுத்த இருப்பதாக வதந்திகள் பரவின.[8] அமீர் கானின் மருமகனான இம்ரான் கான் இந்த படத்தில் அறிமுகம் ஆகலாம் என்றும் அறிவிக்கப்பட்டது, ஆனால் பிறகு அது ஜானே தூ யா ஜானே நா என்ற படத்திற்காக என்று தெரியவந்தது.[9] அடிக்கடி நடிகர்கள் மாற்றம் அடைந்தது தலைமை செய்திகளாக பத்திரிகைகளில் வெளிவந்தது, முதலில் முக்கிய பாத்திரத்தில் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பதாகவும் பின்னர் அவருக்கு பதிலாக ரன்பீர் கபூர்[10][11] நடிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டன. அக்ஷய் குமார் கூட முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர் மறுத்து விட்டார். ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா கூறியதாவது தில்லி-6 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு அவருடைய தேர்வு எப்பொழுதுமே அபிஷேக் பச்சன் நடிக்கவேண்டும் என்பதே. தேதிப் பிரச்சினைகள் காரணமாக அபிஷேக் பச்சன் நடிப்பதில் தாமதம் ஏற்பட்டது, ஆனால் இறுதியில் அவை எல்லாம் சரிப்பட்டுவந்து பின்னர் அபிஷேக் அப்படத்தில் முக்கியபாத்திரம் ஏற்று நடித்தார்.[12] அபிஷேக் பச்சனுக்கு எதிராக ஜோடியாக இப்படத்தில் நடிக்க முக்கியமான பெண் பாத்திரத்தில் சோனம் கபூர் தெரிவு செய்யப்பட்டார்.[13] ரிஷி கபூர் மற்றும் தன்வி அஸ்மியும் இப்படத்தில் பங்கேற்றனர்.[14] இப்படத்தின் படப்பிடிப்பு 20 பெப்ரவரி 2009 அன்று தொடங்கியது.[15] அமிதாப் பச்சன் இப்படத்தில் ரோஷனின் தாத்தாவாக நடிக்கிறார், ரோஷனாக அபிஷேக் பச்சன் தோன்றுகிறார், மேலும் வஹீதா ரஹ்மான் அவருடைய பாட்டியாக நடிக்கிறார்.[16] குல்ஷன் க்ரோவர் இப்படத்தில் அபிஷேக் பச்சனின் அப்பாவாக நடிக்கிறார்.[17] இப்படத்தை மேக்னா அச்சித் மற்றும் ராகேஷின் மனைவியான பாரதி தொகுத்துள்ளனர். ராகேஷ் அளித்த ஒரு பேட்டியில் தான் தொகுக்கும் பணியில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார்.[18]

வணிக விரிவாக்கல் தொகு

இந்தப்படம் முதல்முதலாக துபாய் இன்டர்நேஷனல் திரைப்பட விழா வில் காட்சிக்கு வைக்கப்பெற்றது. திரைப்படக்காட்சிக்குப் பின்னால் இயக்குனர், படத்தில் நடித்த நடிக நடிகைகள் மற்றும் காட்சியை பார்க்க வந்திருந்த ஏராளம் பார்வையாளர்களுக்கு இடையே ஒரு கேள்வி பதில் சுற்று நடத்தியது. இந்த இடைவினையின் போது, ராகேஷ் படத்தின் கருத்து மற்றும் அவருடைய முக்கிய தாக்கங்களைப் பற்றி கூறினார், மேலும் படத்தில் நடித்த நடிகர்கள் ராகேஷுடன் பணி புரிந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி விவரித்தனர். அபிஷேக் மற்றும் சோனம் அளித்த பேட்டியின் விடியோ படத்தை இத்தொகுப்பின் குறிப்புதவிகள் பகுதியில் காணலாம்.[19] இப்படத்திற்கான அதிகாரபூர்வமான மாதிரிக்காட்சிகள் கொண்ட தொடரி 4 ஜனவரி 2009 அன்று வெளியிட்டது மேலும் அதில் தில்லி, ஜமா மஸ்ஜித், திரைஅரங்கு குழுக்கள், இரவில் எடுத்த ரெட் போர்ட் காட்சி, சோனம் கபூர் தில்லியில் உள்ள ஒரு மத்திய பூங்காவில் உள்ள பொது மின்படிக்கட்டுகள் வழியாக வெளியே வரும் காட்சி மற்றும் இறுதியாக சோனம் கபூர் தனது தலையின் மேல் "மசகல்லி" என்ற பெயருடைய புறாவை வைத்துக்கொண்டு நடனமாடும் காட்சியை அபிஷேக் பார்வையிடுதல் போன்ற காட்சிகளின் தொகுப்புகள் அடங்கும்.

வெளியீடு தொகு

இந்தப்படம் 13 பெப்ரவரி 2009, அன்று வெளியிடுவதாக இருந்தது, ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்துவர இயலாமல் போனதால் இப்படத்தின் வெளியீடு தாமதப்பட்டது. படத்தின் பின்னணி இசை முழுமையாக்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இப்படம் 20 பெப்ரவரி 2009 அன்று வெளியானது. மேலும் அதன் துவக்க காட்சிகள் புதிய தில்லியில் 19 பெப்ரவரி 2009 அன்று காட்சியில் வைக்கப்பட்டது. இப்படத்தின் முதல் திரையோட்டம் 15 பெப்ரவரி 2009 அன்று நியூ யார்க் நகரத்தில் நடந்தேறியது.[20]

வரவேற்பு தொகு

இக்கட்டான வரவேற்பு தொகு

11 மார்ச் 2009, அன்றைய நிலைமையின் படி, ரோட்டன் டோமடோஸ் என்ற அமைப்பு இப்படத்திற்கு 33% மதிப்பீடு அளித்துள்ளது, அவற்றில் 3 புத்தம் புதிய வகை மற்றும் 6 நன்மதிப்பற்ற மதிப்புரைகள் அடங்கும். இப்படத்திற்கு கிடைத்த சராசரி மதிப்பீடு 4.9/10.[21]

தி டெலிக்ராப் நிறுவனத்தின் பிரதிம் டி.குப்தா இப்படத்திற்கு இரு கட்டை விரல்களை உயர்த்தி இப்படத்தை அதன் "திணறடிக்கவைக்கும் ஒலி-ஒளி வெடிப்பிற்காகவே" படத்தை பார்க்கலாம் என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டார்.[22] டைம்ஸ் ஓப் இந்தியா வின் நிகத் கச்மி இந்த படத்திற்கு ஐந்திற்கு மூன்று நட்சத்திரங்கள் அளித்து, இப்படத்தை "தில்லி 6 அளிக்கும் செய்திக்காகவும் மற்றும் ஒரேயடியாக இந்தியன் என்ற உணர்வை தூண்டுவதற்காகவும் பாருங்கள்" என்று கூறினார்.[23] என்டி டிவி யின் அனுபமா சோப்ரா கூறியது இப்படம் ஒரு பெருத்த தோல்வியைக் குறிக்கும், "தில்லி 6 மிகவும் குறிக்கோள் கொண்டதாகவும் நல்ல கருத்துகள் கொண்டதாக இருந்தாலும், ஆனால் அவை அனைத்தையும் ஒரு நல்ல படமாக உருமாற்றுவது எப்போதும் எளிதல்ல"[24] சிஎன்என்-ஐபிஎன் னின் ராஜீவ் மசந்த் அதற்கு மூன்று நட்சத்திரங்கள் அளித்து, அதன் கதையானது இதயம் கொண்டதாகவும் மேலும் தில்லி 6 மெஹ்ராவின் ரங் தே பசந்தியைப் போல் நல்ல படமாக அமையவில்லை என்றும் அதன் முடிவு விரக்தி அளிப்பதாகவும் அங்கலாய்த்தார்.[25] நியூ யார்க் டைம்ஸின் ராச்சேல் சால்த்ஸ் கூறியது "தில்லி 6 பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு தெளிவில்லாமலும், அதனால் அதன் முடிவானது, அதற்குரிய தாக்கத்தை உண்டாக்க தவறிவிட்டது".[26] ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஷஷி பாலிகா இப்படத்திற்கு ஐந்திற்கு மூன்று என்ற நட்சத்திர தகுதி அளித்து சொன்னது "மெஹ்ராவின் இதயம் உண்மையாகவே சரியான இடத்தில் இருக்கிறது. ஆனால் அவர் அவருக்காகவும்… மேலும் நமக்கும், கொஞ்சம் கூட மகிழ்சசியை அளித்திருக்கலாமே?"[27] இருந்தாலும், ரெடிப்.காம் நிறுவனத்தின் ஆர்தர் ஜே பைஸ் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பளித்தார் மேலும் படத்தின் புதியது புனையும் பாணியையும் கதையின் கருத்தையும் மெச்சினார்.[28] பாஹன்பார்சினிமா.காம் (PassionForCinema.com (PFC)) என்ற வலைத்தளத்தில் அமந்த சோதி தில்லி-6 பற்றிய தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளியிட்டார், மேலும் இப்படத்திற்கு கிடைத்துவரும் கண்டனங்களை எதிர்த்து வாதாடினார்[29]. ஐஎம்டிபிஎன்ற அமைப்பு, தில்லி-6 படத்திற்கு பத்துக்கு 6.8 நட்சத்திர மதிப்பீடு அளித்துள்ளது.[30].

பாக்ஸ் ஆபிஸ் செயல்திறன் தொகு

இப்படமானது, அலுவல் முறைசாரா வகையில் தோல்வியை தழுவியதாகும், இருந்தாலும் அதிகாரபூர்வமாக அதை சொல்ல இயலாமைக்கு எண்கள் கைகொடுத்ததே ஆகும், அப்படம் வெளியான நாள் அன்று ரூபாய் 80 மில்லியன் வருவாய் பெற்றுத்தந்தது[31] மேலும் உலக அளவில் ரூபாய் 330 மில்லியனை மொத்த வசூலாக அடைந்தது. இதில் இந்தியாவின் பங்கு ரூபாய் 275 மில்லியன் ஆகும் (ரூபாய் 27.50 கொடி). ஐக்கிய பேரரசில், தில்லி 6 மொத்தமாக $160,000 முதல் மூன்று நாட்களில் ஈட்டியது.[32] படத்தைப் பொறுத்த வரை இப்படம் வெளியான பொழுது 2009 ஆம் ஆண்டின் மிக சிறந்த துவக்கத்தை பெற்றதோடு, இது வரை சுமார் 30 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது. இந்தியாவில், இப்படம் துவக்க முதல் வாரத்தில் தில்லி, ஹைதராபாத், சென்னை, பரோடா, பெங்களூரு, கான்பூர், சூரத் போன்ற இடங்களில் உள்ள ஒற்றைத்திரை மற்றும் பல்திரைப்பட அரங்குகளில் மிகவும் வலிமையான வரவு எண்களை பெற்றது, மும்பையில் அதன் வரவு கணிசமாக இருந்தது. கிழக்கு பஞ்சாபில், மூன்றே நாட்களில் தில்லி-6 சுமார் 1.3 கோடி பதிவு செய்தது. அதே நேரத்தில், வெளிநாட்டு அமெரிக்காவில், 90 திரை அரங்குகளில் வாரக்கடைசியில் மொத்தமாக $602k ஈட்டியது.[33] இருந்தாலும், போகப் போக வரவுத்தொகை குறைந்து கொண்டே வந்தது, மேலும் வாய்வழி பரவிய விமரிசனத்தால் இதற்கான ஆதாரம் குறைந்தது. வணிக ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் ராகேஷின் முந்தைய படமான ரங் தே பசந்தியைப் போல் தரத்தை தில்லி-6 அடையாததால், வாரங்கள் செல்லச்செல்ல வரவும் குறைந்தது.[34]

இசை தொகு

Delhi-6
Soundtrack
A. R. Rahman
வெளியீடு
14 January 2009 (India)
ஒலிப்பதிவுPanchathan Record Inn and AM Studios
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்44:18
இசைத்தட்டு நிறுவனம்T-Series
இசைத் தயாரிப்பாளர்A. R. Rahman
A. R. Rahman காலவரிசை
'Slumdog Millionaire
(2008)
Delhi-6 'Blue
(2009)

ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.[35] பிரசூன் ஜோஷி பாடல்களை இயற்றியுள்ளார். இதன் இசைத்தட்டு 14 ஜனவரி 2009 அன்று இந்தியன் ஐடல் 4 போட்டியன்று வெளியானது.[36] சோனம் மற்றும் அபிஷேக் ஒரு புறாவுடன் பாடிய "மசகல்லி" என்ற பாடலின் முதல் விடியோ வெளியிடப்பட்டது. இருந்தாலும், இப்பாட்டு அசலான படத்தில் பங்கேற்கவில்லை. இயக்குனரின் கூற்றின் படி, "இப்பாடல் இந்த கதையின் ஒரு அங்கமாக கருதவில்லை. நான் சொல்வதென்னவென்றால், 'தில்லி-6' போன்ற படத்தில் ஒரு புறாவை வைத்து ஒரு பாடலை அமைக்க யார் தான் நினைப்பார்கள்? அது திடிரென்று நிகழ்ந்தது. நான் என் கதையின் உச்சகட்ட நிலைக்கு வரும் முன், நான் கொஞ்சம் தடுமாறினேன். என் கதையை அதன் முடிவிற்கு கொண்டு செல்லும் முன் எனக்கு அதற்கான ஒரு தொடர் இணைப்பு தேவைப்பட்டது."[37][38] மேலும் வெளியான விடியோ படங்களில் தில்லி-6 படத்தின் தலைப்பு பாடல், காதல் நயம் நிறைந்த ரெஹ்னா தூ மற்றும் நாட்டுப்புறப்பாடலான கெந்தா பூல் , இப்பாடல் சத்திஸ்கர் மாநிலத்து நாட்டுப்பாடலின் தழுவலாகும்.

வரவேற்பு தொகு

இப்படத்தின் பாடல் ஒலிப்பதிவுகள் நல்ல விமரிசனத்தை பெற்றுள்ளன, மேலும் திறனாய்வாளர்களில் பலர் இப்படத்தின் பாடல் தொகுப்பை ரஹ்மானின் மிகச்சிறந்த படைப்புகளாக போற்றுகின்றனர். NaachGaana.com என்ற வலைத்தளம் இப்படத்தின் பாடல்களை கணிப்பீடு செய்தது மேலும் "அவரது ஸ்லம்டாக் மில்லியனைர் பாடல்களைப் போலவே தில்லி-6 படப்பாடல்கள் மிகவும் வளம் மிகுந்ததாகவும், வலிமை கொண்டதாகவும், மேலும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது. நாம் நேரக்கணக்கு பார்க்காமல் தில்லி 6 சாலைகளில் உலா வரும் போது, நாம் எல்லோரும் சேர்ந்து "ரஹ்மானியா" என்ற தோற்றப்பாட்டில் முங்கி திளைத்து மகிழ்வோமாக."[39] பாலிவுட் ஹங்காமாவில் வெளியான கருத்து, "தில்லி 6 மிகவும் கச்சிதமானது. ரஹ்மான் தனது மதிப்பீட்டையே முறியடித்து தில்லி 6 மூலம் மேலும் உயர்ந்துவிட்டார் மேலும் அப்படத்தின் பாடல்கள் மிகவும் எளிதாக அவருடைய மிகவும் நல்ல பாடல்களாக இன்று வரை அமைந்துள்ளது."[40] PlanetBollywood.com வலைத்தளத்தில் கூறியது, "ரஹ்மானால் மேலும் இசையை உயர்த்த இயலாது என்று ஒருவன் எண்ணலாம். அவரால் இன்னும் எவ்வளவு உயரம் தான் போக முடியும் என்று நாம் எண்ணும் போது, அவர் தனது இசையில் நிர்வாணம் அடையும் அளவுக்கு அவர் தனது திறமையை மேலும் உயர்த்துகிறார் என நம்மை எண்ண வைக்கிறார் மேலும் நாமும் அவர் கூட இந்த மகிழ்ச்சி தரும் உலாவில் பங்கேற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். "'தில்லி 6' எதை உணர்த்துகிறது என்றால் ரஹ்மான் இன்னும் தமது விளையாட்டின் உச்சியில் இருப்பதாகவே தெரிகின்றதாகும். அவர் தன உடன் வாழ்வோருக்கு ஒரு முன்னோடியாகும் மேலும் ஒரு கலைஞராக உலகத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டி அவரது மகிழ்வூட்டும் இசையை உலகெங்கும் பரப்பும் வினைஞர் ஆகும். தில்லி -6 படத்தில் அவர் இசை அமைத்த ஒவ்வொரு பாடலும் அவர் தமக்காக ஏற்படுத்திக் கொண்ட தரத்தை தாங்குவதாகும். காதல் நயம் மிக்க பாடல்கள் (தில் கிரா டபாதன், ரஹ்னா தூ), உயர்நிலை பாடல்கள் (தில்லி-6, கெந்தா பூல், ஹே காலா பந்தர்), மனதை உயர்த்தும் பாடல்கள் (மசகல்லி), தெய்வீகப் பாடல்கள் (அர்ஜியான், ஆரத்தி—துமரே பவன் மென்), மிக முழுமையான பரம்பரைப்பாடல் (போர் பயே) மற்றும் சிறிய ஆனால் இனிக்கும் கவிதை (நூர்), தில்லி-6 படத்தின் அசலான ஒலித்தடம் பல வகையை சார்ந்தவையாகும், மேலும் ஒவ்வொரு மனிதனின் ரசனைக்கு ஏற்ப பாடல்கள் அமைக்கப் பெற்றுள்ளன."[41][42] ரெடிப்ப்அமைப்பின் சுகன்யா வெர்மா கூறுவது, "ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்களை கேட்பதற்காக காத்திருப்பது ஒரு பயனுடைய செயலாகும், ஒன்றிற்குப் பின் ஒன்றாக மிகவும் நல்ல ஒலித்தடங்களை அவர் அளிக்கிறார். கோல்டன் க்ளோபஸ் விருதுகள் கிடைத்த தகுதியுடன், அதை தொடர்ந்து எல்லோராலும் மெச்சப்படும் வகையில் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ராவின் தில்லி 6 படத்தில் நல்ல இசை அமைத்துள்ளார். சாந்தினி சௌக்கின் மூலத்தை பற்றி தெளிவான அறிவு கிடைக்கப்பெற இயலாதபோதிலும், ரஹ்மான் தனது திறமையால் இந்த 10-தளங்கள் கொண்ட தொகுப்பில் பல வகைப்பட்ட இசைவெள்ளத்தை மின்சாரத்தை பாய்ச்சுவதுபோல் செலுத்தியுள்ளார்."[43]

இசைத்தடங்கள் தொகு

அதிகாரபூர்வமான இசைத்தட்டு பட்டியலிடல்[44]

# பாடல்Artist(s) நீளம்
1. "Masakali"  Mohit Chauhan 4:49
2. "Arziyan"  Javed Ali, Kailash Kher 8:42
3. "Delhi 6" (French Lyrics by Vivienne Chaix, Claire)Blaaze, Benny Dayal, Vivienne Chaix, Tanvi Shah, Claire 3:36
4. "Rehna Tu"  A. R. Rahman, Benny Dayal, Tanvi Shah 6:51
5. "Hey Kaala Bandar"  Karthik, Naresh Iyer, Srinivas, Bony Chakravarthy, Ember (rap) 5:43
6. "Dil Gira Dafatan"  Ash King, Chinmayee 5:39
7. "Genda Phool"  Rekha Bhardwaj, Shraddha Pandit, Sujata Mazumdar, V.N. Mahathi 2:50
8. "Bhor Bhaye" (Raag: Gujri Todi)Shreya Ghoshal, Ustad Bade Ghulam Ali Khan 3:19
9. "Aarti (Tumre Bhavan Mein)"  Rekha Bhardwaj, Kishori Ashok Gowariker, Shraddha Pandit, Sujata Mazumdar 3:01
10. "Noor" (Recital)Amitabh Bachchan 0:50

குறிப்புதவிகள் தொகு

  1. "Delhi 6". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 10 November 2009.
  2. "Rakeysh Mehra's Delhi-6 to star Hrithik Roshan and Om Puri". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 25 September 2006. {{cite web}}: External link in |work= (help)
  3. "Abhishek Bachchan to do three Rakeysh Mehra films". IndiaFM. பார்க்கப்பட்ட நாள் 25 September 2006. {{cite web}}: External link in |work= (help)
  4. தெற்கு தில்லி மற்றும் தில்லி-6 படத்தில் நடித்தவர்கள் [தொடர்பிழந்த இணைப்பு]
  5. வலைத்தளம்:Dilli 6 EM wala Ladka aa gaya பரணிடப்பட்டது 2013-06-29 at Archive.todayஹிந்துஸ்தான் டைம்ஸ் திரும்பப் பெற்றது 2009-02-25
  6. சைல்ட்ஸ் ப்ளே[தொடர்பிழந்த இணைப்பு] எக்ஸ்பிரஸ்இந்தியா திரும்பிப் பெற்றது 2009-02-25
  7. அதிடி ராவ், விநாயக் டோவல் தில்லி-6 அறிமுகம் மிட் டே திரும்பப்பெற்றது 2009-02-25
  8. அடுத்த படத்தில் ராகேஷ் மெஹ்ரா புதுமுகங்களை அறிமுகம் செய்வாரா?
  9. ஆமிர் கானின் மருமகன் தில்லி 6 இல் நடிக்கிறாரா? பரணிடப்பட்டது 2008-09-07 at the வந்தவழி இயந்திரம்பாலிவுட் நியூஸ்-யாஹூ! இந்தியா மூவீஸ் பரணிடப்பட்டது 2008-09-07 at the வந்தவழி இயந்திரம்
  10. ஹ்ரிதிக் ரோஷனுக்கு பதிலாக ரன்பீர் கபூர் நடிக்கிறார்
  11. "ஹ்ரிதிக் திரும்பவும் தில்லி-6 இல் நடிக்கிறார்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  12. தில்லி 6 அபிஷேக் பச்சனுக்கு சொந்தமானது பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ்திரும்பப்பெற்றது 2009-01-21
  13. ""Sonam's next with Abhishek"". பார்க்கப்பட்ட நாள் 7 November 2007.
  14. இழப்பிற்குப் பிறகு சோனம், அபிஷேக் ஜெய்ப்பூரில்: இந்தியா என்டர்டைன்மென்ட்
  15. இறுதியில் தில்லி 6 துவக்கம்
  16. வலைத்தளம்: Mumbaimirroe.com: தில்லி-6 பற்றிய ஒரு வரைவு பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம்
  17. "குல்ஷன் அபிஷேக்கின் அப்பாவாக நடிப்பார்!- நியூஸ் -நியூஸ் அண்ட் கோஸ்ஸிப்-இந்தியாடைம்ஸ்- படங்கள்". Archived from the original on 2008-12-22. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  18. "'தில்லி 6' இல் நான் என்ன செய்தேன் என்பதை காண நான் ஆவலாகhttp://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_6&action=edit உள்ளேன் என்று சொல்கிறார் ராகேஷ் மெஹ்ரா". Archived from the original on 2009-01-19. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03. {{cite web}}: External link in |title= (help)
  19. துபாய் திரைப்பட விழாவில் தில்லி 6 வெளியீடு
  20. ‘தில்லி 6' பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது திரும்பப்பெற்றது 2009-02-09
  21. "Delhi-6". Rotten Tomatoes. IGN Entertainment, Inc. பார்க்கப்பட்ட நாள் 11 March 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  22. Pratim D. Gupta (21 February 2009). "Sights & sounds of an address". www.telegraphindia.com. த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 2009-09-19.
  23. Nikhat Azmi (19 February 2009). "Review of Delhi-6 at Times". www.timesofindia.com. Times of India. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  24. Anupama Chopra (19 February 2009). "Delhi-6 movie review at NDTV". www.movies.ndtv.com. NDTV. Archived from the original on 2009-02-23. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  25. Rajeev Masand (20 February 2009). "Masand's Movie Review: Delhi-6, a film with heart". www.ibnlive.com. CNN-IBN. Archived from the original on 2009-02-23. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  26. Rachel Saltz (18 February 2009). "Movie Review - Delhi-6 - Indian Soul - NYTimes.com". movies.nytimes.com. The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  27. Shashi Baliga (18:28 IST(20/2/2009)). "6 degrees of confusion". www.hindustantimes.com. Hindustan Times. Archived from the original on 2009-02-23. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25. {{cite web}}: Check date values in: |date= (help)
  28. Arthur J. Pais (19 February 2009). "Rediff.com review of Delhi-6". www.rediff.com. Rediff. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  29. வலைத்தளம்: http://passionforcinema.com/a-collection-of-thoughts-on-தில்லி-6/[தொடர்பிழந்த இணைப்பு]
  30. "IMDB.com Delhi-6 page". 
  31. பிசினஸ் ஓப் சினிமா- முதல் நாளன்று தில்லி 6 இந்தியாவில் ரூபாய் 80 மில்லியன் வசூல் பரணிடப்பட்டது 2011-07-08 at the வந்தவழி இயந்திரம் திரும்பப் பெற்றது 2009-02-25
  32. முதல் வாரத்தில் தில்லி 6 உலகஅளவில் ரூபாய் 330 மில்லியனை எட்டியது பரணிடப்பட்டது 2011-07-08 at the வந்தவழி இயந்திரம் திரும்பப் பெற்றது 2009-02-25
  33. பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் : 2009 ஆண்டின் மிகவும் நல்ல திறப்பு தில்லி 6 க்கு[தொடர்பிழந்த இணைப்பு] சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2009
  34. தில்லி-6 ஒரு தோல்வி ரெடிப்ப்திரும்பப் பெற்றது 2009-02-25
  35. "ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் க்ளோப் அழைப்பு". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  36. 'தில்லி-6′ இந்தியன் ஐடல் நான்கின் ஒலிநாடா வெளியீட்டு விழா பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம் திரும்பப் பெற்றது 2009-02-09
  37. "படத்தில் புறா பாடல் திட்டமிட்டு பாடியதல்ல". Archived from the original on 2009-01-10. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  38. ""தில்லி-6 இசை 14 ஜனவரியில் வெளியீடு"". Archived from the original on 2010-01-05. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  39. ஆகாஷ் காந்தியின் தில்லி 6 இசை பற்றிய விமரிசனம் (9.5/10) NaachGaana.com திரும்பப் பெற்றது 2009-01-18
  40. ஜோகிந்தர் டுடேஜாவின் தில்லி 6 இசை பற்றிய விமரிசனம் பாலிவுட் ஹங்காமா திரும்பப் பெற்றது 2009-01-18
  41. பிளானெட் பாலிவுட் சார்ந்த சமீர் தாவேயின் தில்லி 6 இசை பற்றிய விமரிசனம் Planet Bollywood.com திரும்பப் பெற்றது 2009-01-18
  42. பிளானெட் பாலிவுட் சார்ந்த அமந்தா சோதியின் தில்லி 6 இசை பற்றிய விமரிசனம் Planet Bollywood.com திரும்பப் பெற்றது 2009-02-25
  43. Sukanya Verma (20 January 2009). "Music Review of Delhi 6 By Sukanya Verma on Rediff.com". www.rediff.com. Rediff. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  44. "Delhi-6 by A. R. Rahman". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் 2009-03-05.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_6&oldid=3529886" இலிருந்து மீள்விக்கப்பட்டது