தி கிராண்ட் டிசைன்

பிரபல அறிவியல் புத்தகம்

தி கிராண்ட் டிசைன் (ஆங்கிலம்:The Grand Design) என்பது முதன்மையான இயற்பியலாளர் இசுடீபன் ஃகாக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவால் எழுதப்பட்ட ஒரு பொதுமக்கள் அறிவியல் நூல் ஆகும். இந்த நூலில் அண்டத்தின் தோற்றத்தை விளக்க இறை கருத்துரு தேவை இல்லை என்று வாதிக்கப்படுகிறது. இயற்பியல் விதிகளால் மட்டும் பெரும் வெடிப்பையும், அண்டத்தையும் விளக்க முடியும் என்று இந்த நூல் வாதிக்கிறது. இந்த நூலின் விமர்சனங்களுக்குப் பதில் தருகையில், ஃகாக்கிங், "இறை இல்லை என்று நிரூபிக்க முடியாது, ஆனால் அறிவியல் இறையைத் தேவையற்றதாக ஆக்குகிறது" என்று கூறினார்.

தி கிராண்ட் டிசைன்(The Grand Design)
முதல் பதிப்பின் அட்டைப் படம்
நூலாசிரியர்ஸ்டீபன் ஹோக்கிங் மற்றும் லென்னர்ட் லாடினோவ்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைவெகுஜன அறிவியல்
வெளியீட்டாளர்பாண்டம் நூலகள்
வெளியிடப்பட்ட நாள்
செப்டம்பர் 7, 2010
ஊடக வகைஅச்சு (தடித்த அட்டை)
பக்கங்கள்208
ISBN0553805371
முன்னைய நூல்எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்(A Brief History of Time)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிராண்ட்_டிசைன்&oldid=2917209" இலிருந்து மீள்விக்கப்பட்டது