தி மார்வெல்ஸ்

தி மார்வெல்ஸ் (ஆங்கில மொழி: The Marvels)[3] என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான கேப்டன் மார்வெல் / கரோல் டான்வர்ஸ் போன்ற கற்பனை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான மிஸ். மார்வெல் என்ற டிஸ்னி+ தொடரின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பத்தி மூன்றாவது திரைப்படமும் ஆகும்.

தி மார்வெல்ஸ்
இயக்கம்நியா டகோஸ்டா[1]
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதை
திரைக்கதைமேகன் மெக்டோனல்
இசைலாரா கார்ப்மேன்[2]
நடிப்பு
ஒளிப்பதிவுசீன் பாபிட்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 2023 (2023-11-07)(லாஸ் வேகஸ்)
நவம்பர் 10, 2023 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$274.8 மில்லியன் (மொத்தம்)
$219.8 மில்லியன் (நிகரம்)
மொத்த வருவாய்$198.1 மில்லியன்

இந்த திரைப்படத்தை நியா டகோஸ்டா[4] என்பவர் இயக்க, கேவின் பிகே[5] தயாரிப்பில் பிரி லார்சன், தியோனா பாரிஸ்[6] மற்றும் இமான் வேலனி[7] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மார்வெல் ஸ்டுடியோஸ்[8] ஜூலை 2019 இல் கேப்டன் மார்வெலின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது, மேலும் 2020 ஜனவரியில் மெக்டோனல் திரைக்கதையாளராக இணைந்தார், பிரி லார்சன் மீண்டும் இதில் நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.[9] ஆகஸ்டில் நியா டகோஸ்டா பணியமர்த்தப்பட்டார், நடிகைகளான இமான் வேலனி மற்றும் தியோனா பாரிஸ் டிசம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு 2021 ஏப்ரல் நடுப்பகுதியில் நியூ செர்சியில் தொடங்கியது, இப்படத்தின் தலைப்பு மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுத்தல் 2021 மே மாத இறுதியில் இலண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ செர்சி மற்றும் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பைன்வுட் வளாகத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[10]

தி மார்வெல்ஸ் என்ற படம் நவம்பர் 7, 2023 அன்று லாஸ் வேகாஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 10 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அதன் கதைக்களம் பற்றி எதிர்மறையான விமர்சனம் பெற்று, உலகளவில் $198 மில்லியன் வசூலித்து வசூல் ரீதியாக தோல்வியுற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Vary, Adam B. (August 5, 2020). "'Captain Marvel 2' Lands Nia DaCosta as Director". Variety. Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் August 5, 2020.
  2. "All Details About The Marvels Movie". FilmiBug. 28 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
  3. Hood, Cooper (July 20, 2019). "Captain Marvel 2 Confirmed By Marvel Studios At SDCC 2019". Screen Rant. Archived from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 21, 2019.
  4. Kroll, Justin (August 5, 2020). "'Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel". Deadline Hollywood. Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் August 5, 2020.
  5. Osborn, Alex (May 12, 2018). "Feige: MCU Has 'Plans' to Introduce Ms. Marvel After Captain Marvel". IGN. Archived from the original on April 8, 2019. பார்க்கப்பட்ட நாள் April 8, 2019.
  6. Lawrence, Gregory (February 23, 2021). "Teyonah Parris Teases the Powers Monica Rambeau Could Reveal Next on 'WandaVision'". Collider. Archived from the original on March 6, 2021. பார்க்கப்பட்ட நாள் March 6, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  7. Kroll, Justin (September 30, 2020). "Newcomer Iman Vellani To Play Title Role In Marvel's 'Ms. Marvel' Series For Disney Plus". Deadline Hollywood. Archived from the original on September 30, 2020. பார்க்கப்பட்ட நாள் September 30, 2020.
  8. Hough, Q.V. (March 3, 2019). "Exclusive: Captain Marvel 2 Ideas "Pretty Amazing" Says Marvel Studios Boss Kevin Feige". Screen Rant. Archived from the original on April 8, 2019. பார்க்கப்பட்ட நாள் January 24, 2020.
  9. Aguilar, Matthew (February 14, 2019). "'Captain Marvel's Brie Larson Wants Ms. Marvel In The Sequel". Comicbook.com. Archived from the original on August 18, 2019. பார்க்கப்பட்ட நாள் January 24, 2020.
  10. "Captain Marvel 2 production will begin end of May". Pursue News. April 8, 2021. Archived from the original on April 8, 2021. பார்க்கப்பட்ட நாள் April 8, 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மார்வெல்ஸ்&oldid=3852376" இலிருந்து மீள்விக்கப்பட்டது