துசார் தத்தா

பண்டிட் துசார் தத்தா (Tushar Dutta) ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார். [1]

துசார் தத்தா
வங்காள அறக்கட்டளை ஏற்பாடு செய்த மாயர் மாதுரியில் பண்டிட் துசார் தத்தாவின் நிகழ்ச்சி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு18 ஆகத்து 1969 (1969-08-18) (அகவை 54)
பிறப்பிடம்நத்தோர் மாவட்டம், வங்காளதேசம்
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, பக்தி இசை, பியூசன், கசல், தும்ரி
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1977- தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

துசார் வங்காளதேசத்தின் நத்தோரியல் பிறந்தார். இந்திய பாரம்பரிய இசையின் அடிப்படைகளை துர்காபூரின் பிமல் மித்ராவிடம் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 1983 ஆம் ஆண்டில் ஐடிசி இசை ஆராய்ச்சி ஆராய்ச்சி அகாதமியில் சேர்ந்த இவர், அர்குத் கண்ணபிராம் மற்றும் அருண் பதுரி ஆகியோரின் கீழ் தாலிம் பயிற்சி பெற்றார். கிரானா மற்றும் ஆக்ரா கரானா ஆகிய இரண்டு இசை பாணிகளைக் கலப்பதன் மூலம் அவர் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளார் . [2]

தொழில் தொகு

துசார் அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் சிறந்த தர பாடகர் ஆவார். 1998 ஆம் ஆண்டில், வாரணாசியில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழக போட்டியில் கயலில் முதலிடம் பிடித்தார். மும்பையைச் சேர்ந்த சுர் சிருங்கர் சம்சாத்திடமிருந்து "சுர்மானி" என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திலிருந்து தேசிய உதவித்தொகையும் வழங்கப்பட்டது. [3] [4] [5]

திரை இசை தொகு

இவர் பல திரைப்படங்களுக்கும் பின்னணி அமைத்துள்ளார். [6] மேலும் வலைத் தொடரான தான்சேன் தான்புராவுக்கும் இசையமைத்திருந்தார். [7] [8]

குறிப்புகள் தொகு

  1. "Tushar Dutta to perform at Arts Precinct today". The Daily Star.
  2. "Pandit Tushar Dutta enthralls Dhaka - 43288.php-15-09". www.observerbd.com.
  3. "ITC Sangeet Research Academy :: Our Scholar Perform". www.itcsra.org.
  4. "Indian Classical Music - Bihaan Music - Collections of Hindusthani Classical Music - the Music of India". bihaanmusic.com. Archived from the original on 2021-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
  5. "Tushar Dutta – Vocal". Pragnya. Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
  6. "Untitled Document". kolkatamusicforum.com. Archived from the original on 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link) archived
  7. "::Pandit Tushar Dutta - 14th North America Nazrul Conference – 2014, Toronto Canada ::". deshitv.com. Archived from the original on 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
  8. "Pandit Tushar Dutta's pristine performance at Arts Precinct". The Daily Star.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசார்_தத்தா&oldid=3585636" இலிருந்து மீள்விக்கப்பட்டது