துடைப்பம் (en:broom, De:Besen)) என்பது குப்பைகளையும், தரையிலுள்ள தேவையற்ற பொருள்களையும் ஒன்றாகக் கூட்டி எடுத்து நிலத்தைச் சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருள் ஆகும். இது ஒவ்வொரு நாட்டிலும் இதன் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டில் துடைப்பம் என்றும், ஈழத்தில் தும்புத்தடி, விளக்குமாறு என்றும், தென் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, பாளையம் கோட்டை, தென்காசி போன்ற பகுதிகளில் வாரில் என்றும் அழைக்கப் படுகிறது.

தும்புத்தடி தொகு

விளக்குமாறு தொகு

வாரில் தொகு

தமிழ்நாட்டு துடைப்பம் (broom) அல்லது விளக்குமாறு அல்லது வாரில் அல்லது தும்புத்தடி . வீடு, கடை, அலுவலகம், தெரு போன்ற எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய, தரையிலுள்ள குப்பைகளைச் சுத்தம் செய்ய உதவும் பொருளாகும். .

  • இதன் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு, இதனை பல வகைப்படுத்தலாம். பல்வேறு தாவரங்களின் பாகங்களைக் கொண்டு, இது தயாரிக்கப்படுகிறது. அதனால், பல பெயர்களைப் பெறுகிறது.
  • தென்னை விளக்குமாறு, ஈச்ச விளக்குமாறு, கம்புத் துடைப்பம், தென்னங்குச்சி விளக்குமாறு என்பன, அது தயாரிக்கும் முறையினால், அதற்குரிய பெயரினைப் பெறுகிறது. வீடு கூட்ட, தெருகூட்ட, சருகுகளை மட்டும் ஒதுக்க என வேலைகளுக்கு ஏற்ப பல துடைப்பங்கள் உள்ளன.
  • தென் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, பாளையம் கோட்டை, தென்காசி போன்ற பகுதிகளில் வாரில் என்று அழைக்கப்படுகின்றது. இது இல்லத்தை வாருவற்கு பயன்படுத்தப்படுவதால் வாரில் என வழங்கப்பட்டிருக்கலாம் என்பது கருத்தில் கொள்ளவேண்டியது.
  • இவை அனைத்தும், இயற்கையாக மட்கி அழியக் கூடியவை. எனவே, சுற்றுப்புறத் தூய்மை காக்கப்படுகிறது.
எனினும், தற்போது துடைப்பத்தின், கைப்பிடிக்கப்படும் இடத்தில் நெகிழி (plastic) பயன்படுத்தப்படுகிறது.

காட்சியகம் தொகு

வேறு பெயர்கள் தொகு

  • துடைப்பம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாரியல் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் விளக்குமாறு எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடைப்பம்&oldid=3216833" இலிருந்து மீள்விக்கப்பட்டது