துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில்
இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின் சிவன் கோவில்
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம் தொகு
திருச்சி-முசிறி-நாமக்கல்-சேலம் சாலையில் 10 கிமீ தொலைவில் துடையூர் அமைந்துள்ளது.
இறைவன்,இறைவி தொகு
இக்கோயிலில் உள்ள இறைவன் விஷமங்களேஸ்வரர் ஆவார். இறைவி மங்களநாயகி ஆவார். இறைவன் பெயர் கடம்பவனேசுவரர் என்றும், இறைவியின் பெயர் வீரமங்களேசுவரி என்றும் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
பிற சன்னதிகள் தொகு
திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]