தூண்டப்பட்ட கதிரியக்கம்

தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம் என்பது கதிரியக்கத் தன்மையற்ற லேசான தனிமங்களை தூண்டப்பட்ட அல்லது செயற்கை முறைகளில் கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் நிகழ்வு ஆகும். இந்த தூண்டப்பட்ட கதிரியக்கமானது 1934-ஆம் ஆண்டு ஐரீன் ஜோலியட் கியூரி மற்றும் பிரெடரிக் ஜோலியட்-கியூரி ஆகியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

செயற்கைக் கதிரியக்கமும் இயற்கைக் கதிரியக்க விதிகளுக்கு உட்படும். செயற்கை கதிரியக்கத் தனிமங்கள் எலக்ட்ரான், பாசிட்ரான், நியூட்ரான், மற்றும் காம்மா கதிர்களை வெளிவிடும்.