தூண்டப்பட்ட வினைவேகமாற்றி

சாதாரண நிலையில் நிகழாத ஒரு வினையின் வேகத்தை வினைபடு பொருள் ஒன்று மாற்றினால் அவ்வினை தூண்டப்பட்ட வினைவேக மாற்றம் என்றும் அவ்வாறு மாற்றும் பொருள் தூண்டப்பட்ட வினைவேகமாற்றி என்றும் அழைக்கப்படும். தூண்டப்பட்ட வினைவேகமாற்றிக்கான சான்று பின்வருமாறு.

சோடியம் ஆர்சினைட் கரைசலானது காற்றினால் ஆக்சிசனேற்றம் அடையாது. ஆனால் அக்கரைசலுடன் சோடியம் சல்ஃபைட் கரைசலையும் சேர்த்து அதன் பின் அக்கலவை வழியே காற்றினைச் செலுத்த சோடியம் ஆர்சினைட் ஆனது ஆக்சிசனேற்றம் அடைகிறது. இந்நிகழ்வில் சல்ஃபைட்டானது ஆர்சினைட்டைத் தூண்டுகிறது. எனவே சோடியம் சல்ஃபைட் இவ்வினையில் தூண்டப்பட்ட வினைவேகமாற்றியாகச் செயல்படுகிறது.

உசாத்துணை தொகு