தூத்தூர் (Thoothor) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள ஒரு கடற்கரை கிராமமாகும். இக்கிராமமானது கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தூத்தூர், சின்னதுறை இரவிபுத்தன்துறை, பூத்துறை, இரயுமன்துறை ஆகியவை இதன் அருகாமையில் உள்ள கிராமங்களாகும். இந்த ஐந்து கிராமங்களும் பொதுவாக தூத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. இது விளவங்கோடு தாலுகாவில் அமைந்துள்ளது. இவ்வூர் நாகர்கோவிலிலிருந்து மேற்கு திசையில் 45 கி.மீ தொலைவிலும், கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து தென்கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்தூருக்கு அருகாமையில் திருவனந்தபுரம் விமானநிலையம் பாறசாலை மற்றும் குழித்துறை இரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. தூத்தூர் மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித்தலாகும். இங்கு குறைவான மக்களே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். மொத்த மக்கள்தொகை சுமார் 6000 ஆகும். இது ஏழுதேசம் நகரப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

தூத்தூர்
கிராமம்
தூத்தூர் is located in தமிழ் நாடு
தூத்தூர்
தூத்தூர்
தமிழ்நாட்டில் இருப்பிடம்
தூத்தூர் is located in இந்தியா
தூத்தூர்
தூத்தூர்
தூத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°15′40″N 77°08′35″E / 8.260998°N 77.143094°E / 8.260998; 77.143094
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி ஒன்றியம்
மக்கள்தொகை
 • மொத்தம்6,000
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
629176
வாகனப் பதிவுத.நா. 75
அருகில் உள்ள நகரங்கள்திருவனந்தபுரம், மார்த்தாண்டம், நாகர்கோவில்
இணையதளம்www.thoothoor.com

பெயர்காரணம் தொகு

தூத்தூர் என்ற பெயர் தூ, தூய்மை மற்றும் ஊர் என்ற வார்த்தைகளில் வேர்களைக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுக்குமுன் இப்பகுதி வெண்மணலால் நிரம்பியிருந்தது மேலும் மக்கள் மிகச் சிறிய பகுதியிலேயே வாழ்ந்தனர், எனவே பெரும்பாலான பகுதி காலியாக இருந்ததாலும் வெண்மணலால் மூடப்பட்டிருந்தாலும் இவ்வூர் இப்பெயர் பெற்றது.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்தூர்&oldid=3209981" இலிருந்து மீள்விக்கப்பட்டது