தெங்கே நீர்த்தேக்கம்

தெங்கே நீர்த்தேக்கம்[1] (ஆங்கில மொழி: Tengeh Reservoir, சீன மொழி: 登格蓄水池) சிங்கப்பூரின் மேற்கு நீர்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். ஜோஹோர் நீர் சந்தியில் சென்று கலக்கும் சுங்கெய் தெங்கா ஆற்றை மறித்து இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.

இப்பொழுது சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ள இது ஒரு தடை செய்யப்பட்டப் பகுதியாகும். இதன் தென் பகுதியில் நிறைய கோல்ப் மைதானங்கள் உள்ளன. சிங்கப்பூரின் பொதுப் பயனுடைமை வாரியமும் பொருளாதார வளர்ச்சி வாரியமும் 2011ல் இந்த நீர்த்தேக்கத்தில் மிதக்கும் கதிரொளித் தகடுகளை நிறுவத் திட்டமிட்டன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "சிங்கப்பூர் நீர்ப்பிடிப்பு பகுதிகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-25. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
  2. வாரியத்தின் சுற்றுச்சூழலில் கதிரொளித் தகடுகளின் தாக்கம் தொடர்பான ஆய்வுகள் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெங்கே_நீர்த்தேக்கம்&oldid=3712930" இலிருந்து மீள்விக்கப்பட்டது