தெரிசனம்கோப்பு

தெரிசனம்கோப்பு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்த கிராமம். இயற்கை வளங்களாலும், அழகிய மலைத்தொடராலும் சூழப்பெற்ற சிறிய கிராமம் ஆகும். கிராமத்தின் கிழக்கு பகுதியில் தாடகை மலை உள்ளது.  ராமாயணத்தில் வரும் ராமரின் தாடகை வதமானது, இப்பகுதியின் அருகே நடந்ததாக நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் “சரமா”கிய அம்பினை, இப்பகுதியிலிருந்து கோர்த்ததால், “திருச்சரம்கோர்ப்பு” என்று அழைக்கப்பட்ட இடத்தின் பெயர் காலப்போக்கில் மருவி “தெரிசனம்கோப்பு” என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

செவ்வகமாக காட்சியளிக்கும் ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது “ராகவேஸ்வரர் உடனுறை உலகநாயகி அம்மன் திருக்கோவில்”. ஸ்ரீராமர், தாடகையை கொன்றதும், பெண்ணை கொன்ற பாவம் தீர சிவனை வழிபட்டதால், இந்த ஆலய மூலவர் சிவன், “ராகவேஸ்வரர்”, அதாவது ராகவன் வழிபட்ட ஈஸ்வரன் “ராகவேஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார். 

பெரும்பான்மையான மக்கள் உழவுத் தொழிலை செய்கின்றனர். மாடு வளர்ப்பு, வாழை, தென்னை வளர்ப்பு போன்ற உழவு சார்ந்த தொழில்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஆயுர்வேத தொழிலில் உலகப்புகழ் பெற்ற “ஸ்ரீ சாரதா ஆயுர்வேதிக் மருத்துவமனை” இங்கு அமைந்துள்ளது. கந்த சஷ்டியின் போது இங்கு நடைபெறும் சூரசம்கார திருவிழா புகழ் பெற்றது.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரிசனம்கோப்பு&oldid=2179137" இலிருந்து மீள்விக்கப்பட்டது