தேசிய அறிவியல், தொழில்நுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனம்

தேசிய அறிவியல், தொழினுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனம் (National Institute of Science, Technology and Development Studies) என்பது இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு பிரிவாகும்.[1] இது அறிவியல், சமூகம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வு மற்றும் அறிவியல், தொழினுட்பம் மற்றும் சமூகத்தின் இடைமுகத்தை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளது.

தேசிய அறிவியல், தொழினுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனம்
Established30 செப்டம்பர் 1980
இயக்குநர்பிரசாந்த் கோசுவாமி
Locationகே. எஸ். கிருஷ்ணன் மார்க்கம், புது தில்லி, இந்தியா
Websitewww.nistads.res.in

வரலாறு தொகு

ஆகத்து 1973-ல். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் புது தில்லை தலைமையகத்தில் அறிவியல், தொழினுட்பம் மற்றும் மேம்பாடு பற்றிய ஆய்வு மையத்தை அமைத்தது. பின்னர் 30 செப்டம்பர் 1980 அன்று, ஆட்சிக்குழு இம்மையம் சுயாட்சி பெற்ற நிறுவனமாகச் செயல்பட ஒப்புதல் அளித்தது. தற்போதைய பெயரான, தேசிய அறிவியல், தொழினுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனம் என்பது ஏப்ரல் 1, 1981ல் அமலுக்கு வந்தது. 2021ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கியது.[2]

கல்வியாளர்கள் தொகு

இந்நிறுவனத்தில் பேராசிரியர்களாக இயக்குநர் மற்றும் 14 பெண்கள் உட்பட 45 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் பல துறைகளில் பணியாற்றிவருகின்றனர். 35 பேர் அறிவியல் அல்லது பொறியியலில் பட்டம் பெற்றவர்கள், மீதமுள்ள 10 உறுப்பினர்கள் சமூக அறிவியலைச் சேர்ந்தவர்கள். பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து முனைவர் பட்டம் பெறச் சேரும் மாணவர்கள் இங்குப் பதிவு செய்கிறார்கள். இந்த நிறுவனத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வருகை ஆராய்ச்சியாளர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு