தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி (National Institute of Technology, Tiruchirappalli, NITT), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் மண்டலப் பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (Regional Engineering College, REC) என அழைக்கப்பட்டது.

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சராப்பள்ளிி
National Institute of Technology, Tiruchirappalli
வகைதேசிய தொழில்நுட்ப கழகங்கள்
உருவாக்கம்1964
கல்வி பணியாளர்
246[1]
மாணவர்கள்3,457
பட்ட மாணவர்கள்2,190[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,267[1]
அமைவிடம், ,
வளாகம்800 ஏக்கர்கள்
இணையதளம்www.nitt.edu

அமைவிடம்: இக்கழகம் திருச்சியிலிருந்து, தஞ்சாவூர் செல்லும் சாலையில் இருக்கும், துவாக்குடி என்னும் திருச்சியின் புறநகர் பகுதியில் உள்ளது.

தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களை உருவாக்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது[2]. நாடு முழுவதிலும் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப கழகங்களில் இதுவும் ஒன்றாகும். ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர்[1].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "NITT at a Glance". NITT. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  2. "History of the Institute". NITT. பார்க்கப்பட்ட நாள் 2010-04-28.

வெளி இணைப்புகள் தொகு