தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்

பாக்கித்தானின் இசுலாமாபாத்தில் உள்ளது

தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் (National Seismic Monitoring Centre) பாக்கித்தானின் இசுலாமாபாத்தில் உள்ள ஒரு பூகம்ப கண்காணிப்பு மையம் ஆகும். இந்த மையம் பாக்கித்தான் வானிலை துறையால் நிர்வகிக்கப்படுகிறது. [1]

தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்
National Seismic Monitoring Centre
தலைமையகம்
ஆள்கூறுகள்33°41′00.91″N 73°03′50.05″E / 33.6835861°N 73.0639028°E / 33.6835861; 73.0639028
வலைத்தளம்seismic.pmd.gov.pk

பின்னணி தொகு

20 அகன்ற வரிசை நில அதிர்வு நிலையங்கள் மற்றும் 15 குறுகிய கால நில அதிர்வு நிலையங்களின் வலையமைப்பை இந்த மையம் இயக்குகிறது. பாக்கித்தானில் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மக்ரான் துணை மண்டலத்தில் சுனாமி நிலநடுக்கத்தை மேலும் கண்டறியவும் பாக்கித்தானின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்</nowiki> செயல்படுகிறது. தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், கராச்சி மற்றும் பாக்கித்தான் கடற்படையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இம்மையம் செயல்படுகிறது. நாடு முழுவதும் இருக்கும் இந்த வலையமைப்பில் பிரித்தானிய மற்றும் சீன நில அதிர்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "About us » National Seismic Monitoring Centre, Islamabad". seismic.pmd.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
  2. Ahmed Amir, Najeeb (2016). "An Inception Report on Tsunami Early Warning System and Standard Operating Procedure of Pakistan Meteorological Department" (PDF). Pakistan Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.