தேவயாத் போதர்

தேவயாத் போதர் (Devayat Bodar)(c. 900 AD - 1025AD) என்பவர் குசராத்தினைச் சேர்ந்த ஓரு யாதவ் (அஹிர்) தலைவர் ஆவார்.[1] இவர் தனது வீரம், தியாகம் மற்றும் தாய்நாட்டின் மீதான அன்பு ஆகியவற்றால் அறியப்பட்ட ஒரு முக்கியமான நபராக இருந்தார். இவருடைய உதவியுடன் சூடாசமா ஆட்சியாளரான ரா நவ்கான் ஜுனாகத்தின் அரியணையைப் பெற்றார். சோலங்கி ஆட்சியாளரிடமிருந்து ரா நவ்கானைக் காப்பாற்ற தேவயாத் போதர் தனது மகன் உகாவைத் தியாகம் செய்தார்.

ஜூனாகத்தில் உள்ள தேவயாத் போதரின் சிலை
ரா நவ்கானைக் காப்பாற்ற தனது சொந்த மகன் உகாவைக் கொல்லும் ஜஹல், சோனல் மற்றும் தேவயாத் போதர் ஆகியோரின் ஓவியம்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

தேவயாத் போதர் குசராத்தின் அலிதர்-போதிதார் கிராமத்தில் அகிர் சமூகத்தில் பிறந்தார்.[2] இவருக்கு சோனால் என்ற மனைவியும் உகா என்ற மகனும், ஜஹல் என்ற மகளும் இருந்தனர்.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. . 1971. {{cite book}}: Missing or empty |title= (help)
  2. . 1972. {{cite book}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவயாத்_போதர்&oldid=3662167" இலிருந்து மீள்விக்கப்பட்டது