இதே பெயரைக் கொண்ட நடிகையைப் பற்றி அறிய, தேவயானி (நடிகை) என்ற பக்கத்தைப் பார்க்கவும்.


தேவயானி அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான சுக்கிராச்சாரியாரின் மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க சீடனாக வந்த பிரகஸ்பதியின் மகன் கசன் மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு அந்தணர் திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான்.

தேவயானியின் திருமணம் தொகு

கசனின் சாபப்படி, தேவயானி சந்திர குல மன்னன் யயாதியை மணந்தாள். தேவயானிக்கு யது, துர்வசு ஆகிய இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். தேவயானியின் தோழியும், பணிப்பெண்ணுமாகிய சர்மிஷ்டையை இரகசியமாக திருமணம் செய்து கொள்கிறான் யயாதி. அவள் மூலம் யயாதிக்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. இந்த விசயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் முறையிட, சுக்கிராச்சாரியர் யயாதிக்கு கிழட்டுத்தன்மையை அடையும்படி சாபம் இடுகிறார். தவறை உணர்ந்த யயாதி, சாபவிமோசனம் கேட்கிறான். அதற்கு சுக்கிராச்சாரியார், உனது கிழட்டுத்தன்மையை உனது மகன்கள் ஏற்றால் உனது கிழட்டுத்தன்மை நீங்கும் எனக் கூறுகிறார். யயாதியின் இரண்டாம் மனைவியான சர்மிஷ்டையின் இளைய மகன் புரு தனது தந்தையின் கிழட்டுத்தன்மையை பெற்று, தனது இளமையை தனது தந்தையான யயாதிக்கு அளிக்கிறான்.

புருவின் வழித்தோன்றல்கள் தொகு

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின், யயாதி மீண்டும் தனது இளமையை தன் மகன் புருவிற்கு திருப்பி அளித்து, தனது கிழட்டுத்தனத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறான். இந்த புருவின் வழித்தோன்றல்களே சந்திர குலத்தில் பிறந்த சாந்தனு, பீஷ்மர், பாண்டவர் மற்றும் கௌரவர் ஆவர்.

யதுவின் வழித்தோன்றல்கள் தொகு

யயாதி-தேவயானிக்கு பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே யாதவகுலத்தினர் ஆவர். ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் யதுவின் குலத்தவர் என்று நம்புகின்றனர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவயானி&oldid=3802411" இலிருந்து மீள்விக்கப்பட்டது