தேவ்ஜி படேல்

இந்திய அரசியல்வாதி

தேவ்ஜி எம். படேல் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் உறுப்பினராவார். இவர் இராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக 2009 ஆம் ஆண்டில் ஜலோர் (மக்களவைத் தொகுதியில் இருந்து) தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களிலும் இவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் ஒரு விவசாயி தந்தைக்கு சஞ்சோருக்கு அருகில் உள்ள ஜஜுசன் என்ற கிராமத்தில் பிறந்தார்.[1][2] இவர் டிவைன் டியூப்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மும்பையில் ஒரு எஃகு வர்த்தக வியாபாரத்தை நிறுவினார். இந்தப் பெயரையே தனது பள்ளி மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கும் சூட்டினார்.

மாண்புமிகு
தேவ்ஜி படேல்
தொகுதிஜலோர் மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்- இந்திய நாடாளுமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 செப்டம்பர் 1976 (1976-09-25) (அகவை 47)
ஜலோர், ராஜஸ்தான்
தேசியம் India இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
திருமதி. இந்திரா டி. படேல் (தி. 1999)
வாழிடம்(s)ஜலோர், ராஜஸ்தான்
முன்னாள் கல்லூரி
மார்வாரி வித்யாலயா உயர்நிலைப் பள்ளி
வேலைமக்களவை உறுப்பினர் - இந்திய நாடாளுமன்றம்
As of 17 சனவரி, 2017
மூலம்: [1]

நாடாளுமன்ற உறுப்பினர் தொகு

இவா் நிலக்கரி மற்றும் எஃகு மீதான நிலைக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் 16 வது மக்களவையில் 7 தனிநபர் மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.

ஆதாரங்கள் தொகு

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  2. "Devji Patel: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்ஜி_படேல்&oldid=3503196" இலிருந்து மீள்விக்கப்பட்டது