தைமோசின்கள் (Thymosins) என்பவை பல விலங்குகளின் திசுக்களில் காணப்படும் இயக்குநீர் வகையைச் சேர்ந்த சிறிய புரதங்களாகும். தைமசிலிருந்து முதன்முதலாகப் பிரித்தெடுக்கபட்டதால்[1] தைமோசின்கள் என்ற பெயர் பெற்றாலும், தற்பொழுது இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு திசுக்களில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தைமோசின்கள் பலதரப்பட்ட உயிரியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது[2]. முதன்மையாக, தைமோசின் ஆல்ஃபா1, தைமோசின் பீட்டா4 போன்றவை மருத்துவத்தில் சாத்தியப்படக்கூடிய இன்றியமையாப் பயன்களைக் கொண்டுள்ளது; இவற்றில் சில ஆய்வகங்களிலிருந்து மருத்துவகங்களுக்குச் சென்றுள்ளன. இவை, உயிரிய விளைவு மாற்றிகளாக (biological response modifiers) வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆவின பீட்டா-9 தைமோசின் பல்புரதக்கூற்றின் அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு வரைவு (NMR) வடிவம்

மேற்கோள்கள் தொகு

  1. Low TL, Thurman GB, McAdoo M, McClure J, Rossio JL, Naylor PH, Goldstein AL. (Feb 1979). "The chemistry and biology of thymosin. I. Isolation, characterization, and biological activities of thymosin alpha1 and polypeptide beta1 from calf thymus". J Biol Chem. 254 (3): 981-6. பப்மெட்:216684. 
  2. Goldstein AL, Badamchian M. (Apr 2004). "Thymosins: chemistry and biological properties in health and disease.". Expert Opin Biol Ther. 4 (4): 559-73. பப்மெட்:15102605. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமோசின்&oldid=2746333" இலிருந்து மீள்விக்கப்பட்டது