தையாப் மொழி

தையாப் மொழி பப்புவா நியூகினியாவின் கிழக்கு செப்பிக் மாகாணத்தில் ஏறத்தாழ நூறு பேர் மட்டுமே பேசுகின்ற அருகிவரும் ஒரு தனி மொழி ஆகும். கப்புன் என்னும் ஊரில் மட்டும் பேசப்படுவதால் இது கப்புன் மொழி எனவும் அழைக்கப்படுகிறது. இதைப் பேசுவோர் இம்மொழியை விட்டுப் படிப்படியாகத் தேசிய மொழியும், நாட்டில் பரவலாகப் பேசப்படுவதுமான தொக் பிசின் மொழிக்கு மாறிவருகின்றனர்.

தையாப்
கப்புன்
நாடு(கள்)பப்புவா நியூகினியா
பிராந்தியம்கப்புவன் ஊர் (கிழக்கு செப்பிக் மாகாணம்)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
75  (2007)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3gpn
மொழிக் குறிப்புtaia1239[2]

இம்மொழி பற்றி முதலில் அறிந்துகொண்ட ஐரோப்பியர், செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு மதப்பிரசாரகர். இவர் 1938 இம்மொழி பற்றி அறிந்தார். இப்பகுதி அணுகுவதற்கு இயாலாது இருந்ததால், 1970கள் வரை இம்மொழியை யாரும் ஆய்வு செய்யவில்லை. டொனால்ட் லேக்கொக் (1973) என்பவர் தையப் மொழியை அவர் உருவாக்கிய செப்பிக் ராமு மொழிக் குடும்பத்தில் சேர்த்திருந்தார். ஆனால், இம்மொழியின் சொற்கோவையும், அமைப்பும் குறித்த குடும்ப மொழிகளிலிருந்தும் வேறுபட்டவை. ரொஸ் (2005) என்பவர் இம்மொழி நியூகினியாவில் பேசப்படும் எந்த மொழியுடனாவது தொடர்புள்ளது என்பதற்குச் சான்றுகள் இல்லை என்கிறார். இன்று தையாப் மொழி பேசப்படும் இடம் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் கடற்கரைக்கு அப்பால் இருந்த தனித் தீவுடன் பொருந்துவது, இம்மொழி ஒரு தனி மொழி என்ற கருத்துக்கு இணக்கமாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. தையாப் at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Taiap". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தையாப்_மொழி&oldid=2464472" இலிருந்து மீள்விக்கப்பட்டது