தொழிற்பாட்டுத் தொடர்

அறிமுக வேதியியலில் தொழிற்பாட்டுத் தொடர் (activity series) அல்லது தாக்கத் தொடர் (reactivity series) எனப்படுவது உலோகங்களை அவை வெவ்வேறு பதார்த்தங்களுடன் காட்டும் தாக்கங்களின் அடிப்படையில் உயர்ந்ததில் இருந்து தாழ்ந்தது வரை ஒழுங்குபடுத்தி அமைக்கும் தொடர் ஆகும்.[1][2][3] இது உலோகங்கள் நீர், வளி, ஐதான அமிலங்கள் ஆகியவற்றுடன் காட்டும் தாக்கத்தின் அடிப்படையிலும் உலோகம் மற்றொரு உலோகத்தை அதன் உப்பில் இருந்து இடம்பெயர்க்கும் தன்மையின் அடிப்படையிலும் (ஒற்றை இடப்பெயர்ச்சித் தாக்கம்) தாதுவிலிருந்து உலோகம் பிரித்தெடுக்கப்படும் முறையின் அடிப்படையிலும் பெறப்படும் தொடர் ஆகும்.

மூலகம் அயனி தொழிற்பாடு பிரித்தெடுப்பு
Cs Cs+ நீருடன் தாக்கம் மின்பகுப்பு
Rb Rb+
K K+
Na Na+
Li Li+
Ba Ba2+
Sr Sr2+
Ca Ca2+
Mg Mg2+ அமிலங்களுடன் தாக்கம்
Al Al3+
Mn Mn2+ அமிலங்களுடன் தாக்கம் காபனுடனான வெப்பத் தாழ்த்தல்
Zn Zn2+
Cr Cr2+
Fe Fe2+
Cd Cd2+
Co Co2+
Ni Ni2+
Sn Sn2+
Pb Pb2+
Sb Sb3+ ஒட்சியேற்றும் அமிலங்களுடன் தாக்கம் வெப்பத்தினால் அல்லது
பௌதீக முறை பிரிப்பு
Bi Bi3+
Cu Cu2+
Hg Hg2+
Ag Ag+
Pt Pt2+
Au Au3+

தொழிற்பாட்டுத் தொடரில் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும்போது உலோகங்களின்:

ஒற்றை இடப்பெயர்ச்சித் தாக்கங்கள் தொகு

தொழிற்பாட்டுத் தொடரில் மேலே உள்ள உலோகம் கீழே உள்ள உலோகத்தின் உப்பிலிருந்து அதன் உலோகத்தை இடம் பெயர்க்கும்.

எ.கா: இரும்பு, செப்பு சல்பேற்றுக் கரைசலுடன் தாக்கமுற வைக்கப்படும்போது செம்பை இடம்பெயரச் செய்து படிவிப்பதுடன் இரும்பு (II) சல்பேற்று உருவாகும்.

Fe (s) + CuSO4 (aq) → Cu (s) + FeSO4 (aq)

பொதுவாக தாக்குதிறன் குறைந்த மூலகம் இடம்பெயர்க்கப்படும். இதேபோலவே பின்வரும் தாக்கங்களும் அமையும்.

Al (s) + Fe2O3 (s) → Fe (s) + Al2O3 (s)
2 Mg (s) + TiCl4 (l) → Ti (s) + 2 MgCl2 (s)

மேற்கோள்கள் தொகு

  1. France, Colin (2008), The Reactivity Series of Metals
  2. Briggs, J. G. R. (2005), Science in Focus, Chemistry for GCE 'O' Level, Pearson Education, p. 172
  3. Lim Eng Wah (2005), Pearson Education, p. 190 {{citation}}: Missing or empty |title= (help); Unknown parameter |unused_data= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்பாட்டுத்_தொடர்&oldid=2752458" இலிருந்து மீள்விக்கப்பட்டது