தோடா மொழி அல்லது தொதவம் தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1600 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இதிலுள்ள உரசொலிகள், உருட்டொலிகளுக்காகப் பெயர் பெற்றது.

தோடா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு - நீலகிரி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
600  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dra
ISO 639-3bfq

தோடர் மொழி இலக்கணம் தொகு

தாம் உதகமண்டலத்தில் வாழ்ந்த காலத்தில் ஜி. யு. போப் தோடர் மொழிக்கு ஓர் இலக்கண நூல் எழுதினார். ’அன் அவுட்ஸ்டேன்டிங் கிராமர் ஃபார் தோடா லேங்குவேஜ்’ (An outstanding grammar for Toda Language) எனும் பெயரில் அந்நூலை வெளியிட்டார்.[1] இந்த பழங்குடி மொழியானது மிக விரைவாக அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள் ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.[2]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30
  2. ஒய்.ஆண்டனி செல்வராஜ் (13 ஆகத்து 2018). "அழிந்துவரும் பூர்வீகக்குடி மக்களான தொதவர் இசை மொழி: 'யுனெஸ்கோ' தகவலால் வரலாற்று ஆர்வலர்கள் கவலை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா_மொழி&oldid=3577583" இலிருந்து மீள்விக்கப்பட்டது