தங்கதூரி மனேம்மா (T. Manemma)(1942-2018) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் எட்டாவது மற்றும் ஒன்பாதாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.

த. மனேம்மா
Tangaturi Manemma
உறுப்பினர் மக்களவை-செகந்தராபாது
பதவியில்
1987–1991
முன்னையவர்தங்குதுரி அஞ்சய்யா
பின்னவர்பி. தத்தாத்திரேயா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1942
ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு9 செப்டம்பர் 2018 (76 ஆண்டுகள்)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தங்குதுரி அஞ்சையா

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மனேம்மா 29 ஏப்ரல் 1942ல் ஐதராபாத்தில் கே. சங்கர் ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார். இவர் சதர் காட் மார்வாடி இந்தி வித்யாலயாவில் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வினை முடித்தார்.[1]

தொழில் தொகு

1986-ல் மனேம்மா கணவர் இறந்த பிறகு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் மனேம்மா 1,82,861 வாக்குகள் பெற்றார்.[2] இவர் எட்டாவது மக்களவையில் செகந்திராபாது மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்தார். மனேம்மா நாடாளுமன்ற உடல்நலம் மற்றும் குடும்ப நலனுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1]

1989 இந்தியப் பொதுத் தேர்தலின் போது, ஜனதா தளத்தின் வேட்பாளரை 1,47,601 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மனேம்மா தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.[3] நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாகப் பதவி வகித்தபோது, சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஆலோசனைக் குழுவுடன், சபையின் அமர்வில் உறுப்பினர்கள் இல்லாதது தொடர்பான குழுவிலும் பணியாற்றினார்.[1] 2008-ல், முஷீராபாத் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மே 1960-ல், மனேம்மா இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த தங்குதூரி அஞ்சய்யாவை மணந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். இந்த இணையருக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். மனேம்மா உடல்நலக்குறைவு காரணமாக ஜூப்ளி மலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 11:30 மணியளவில் இறந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Members Bioprofile: Manemma, Shrimati Tangaturi". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. "Details of Bye Elections from 1952 to 1995" (XLSX). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  3. "Statistical Report on General Elections, 1989 to the Ninth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 37. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  4. "Manemma scores upset win in Musheerabad". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Manemma-scores-upset-win-in-Musheerabad/article15234130.ece. பார்த்த நாள்: 27 November 2017. 
  5. Mayabrahma, Roja (9 September 2018). "Former CM T Anjaiah's wife Manemma passes away". India: The Hans. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._மனேம்மா&oldid=3743837" இலிருந்து மீள்விக்கப்பட்டது