நசிலி சப்ரி

எகிப்திய ராணி

சிலி சப்ரி ( Nazli Sabri) ( 25 ஜூன் 1894 - 29 மே 1978) 1919 முதல் 1936 வரை எகிப்து இராச்சியத்தில் முதல் ராணி மனைவியாக இருந்தார். இவர் எகிப்தின் சுல்தான் முதலாம் புவாதின் இரண்டாவது மனைவியாவார்.

நசிலி சப்ரி
எகிப்தின் ராணி
Tenure15 மார்ச் 1922 – 28 ஏப்ரல் 1936
எகிப்தின் சுல்தானா[1]
Tenure26 மே 1919 – 15 மார்ச் 1922
பிறப்பு(1894-06-25)25 சூன் 1894
அலெக்சாந்திரியா, கெடிவேட் மாநிலம்
இறப்பு29 மே 1978(1978-05-29) (அகவை 83)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
புதைத்த இடம்
ஹோலி கிராஸ் கல்லறை, கல்வர் நகரம், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வாழ்க்கைத் துணைகள்
குழந்தைகளின்
பெயர்கள்
  • பாரூக்
  • பவ்சியா
  • பைசா
  • பைக்கா
  • பாத்தியா
பெயர்கள்
மேரி எலிசபெத் சப்ரி, முன்பு நசிலி அப்துல் ரகீம் சப்ரி
மரபுஅலாவியா (திருமணம் மூலம்)
தந்தைஅப்துல் ரகீம் சப்ரி பாசா
தாய்தவாபிகா செரிப் கனிம்
மதம்கத்தோலிக்க திருச்சபை (1950–1978)
சுன்னி இசுலாம் (1894–1950)

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

நசிலி 1895 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தைக்கும் மற்றும் துருக்கிய, கிரேக்கம் மற்றும் பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த தாய்க்கும் மகளாகப் பிறந்தார். [2] [3] இவரது தந்தை அப்துல் ரகீம் சப்ரி பாசா, [4] விவசாய அமைச்சராகவும் மற்றும் கெய்ரோவின் ஆளுநராகவும் இருந்தார். இவரது தாயார் தவ்பிகா கானும் செரீப் என்பவராவார். சிலிக்கு செரிப் சப்ரி பாசா என்ற சகோதரரும், அமினா சப்ரி என்ற சகோதரியும் இருந்தனர். [4]

இவர் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பிரதம மந்திரியும் வெளியுறவு அமைச்சருமான முகமது செரிப் பாசாவின் தாய்வழி பேத்தி ஆவார். மேலும், இவர் பிரான்சில் பிறந்த அதிகாரி சுலைமான் பாசாவின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.

நசிலி முதலில் கெய்ரோவில் படிக்கச் சென்றார். பின்னர் அலெக்சாந்திரியாவிலுள்ள நோட்ரே-டேம் டி சியோன் என்ற கல்லூரியில் படித்தார். இவரது தாயார் இறந்ததைத் தொடர்ந்து, இவரும் அவரது சகோதரியும் பாரிஸில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளிக்கு இரண்டு ஆண்டுகள் அனுப்பப்பட்டனர். திரும்பி வந்த பிறகு, நசிலி தனது உறவினரான கலீல் சப்ரியை [[கட்டாயத் திருமணம்]} செய்து கொள்ள வேண்டியதாயிற்று.[2] ஆனால் பதினோரு மாதங்களில் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. [2] பிரிந்த பிறகு, இவர் எகிப்திய அரசியல் ஆர்வலர் சபியா சாக்லூலின் வீட்டில் தங்கினார். அங்கு இவர் சாக்லூலின் மருமகன் சயீத் சாக்லூலை சந்தித்தார்; 1919 புரட்சியைத் தொடர்ந்து சயீத் தனது மாமா சாத் சாக்லோலுடன் நாடுகடத்தப்படும் வரை சேர்ந்து வாழ்ந்தனர். [2]

இராணியாக தொகு

 
நசிலி சப்ரியின் பிறந்தநாளில் எடுக்கப்பட அதிகாரப்பூர்வ புகைப்படம்

எகிப்தின் சுல்தான், முதலாம் புவாது, முதலில் நசிலியை ஒரு ஓபரா நிகழ்ச்சியில் பார்த்தார். மே 12, 1919 இல், புவாது இவருக்கு 26 வயது மூத்தவராக இருந்தபோதிலும், இவரிடம் தனது காதலை முன்மொழிந்தார். 24 மே 1919 அன்று கெய்ரோவில் உள்ள புசுடன் அரண்மனையில் சுல்தான் புவாது நசிலியை மணந்தார். நசிலி மற்றும் புவாது இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.[5] பின்னர் இவர்கள் அப்பாசியா அரண்மனைக்கு மாறினர்.

இவர்களின் ஒரே மகன் பாரூக் பிறந்த பிறகு, நசிலி தனது கணவரின் அதிகாரப்பூர்வ அரச இல்லமான கூபே அரண்மனைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். [6] புவாத்திற்கு "அரசன்" என்ற பட்டம் வழங்கப்படும்போது இவருக்கும் ராணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். எகிப்த்தின் எதிர்கால மன்னன் பாரூக், என்ற ஒரு மகனும், பவ்சியா (ஈரானின் ராணி ஆனார்), பைசா, பைக்கா, பாத்தியா என்ற நான்கு மகள்களும் இருந்தனர்.

புவாதின் ஆட்சியின் பெரும்பகுதி முழுவதும் அரண்மனையிலேயே மட்டுப்படுத்தப்பட்ட நசிலி, ஓபரா நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் மற்றும் பிற பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். [7] தம்பதியினரிடையே சண்ட ஏற்படும்போதெல்லாம் இவரை மன்னர் புவாது அடித்துத் துன்புறுத்தியதாகவும் மற்றும் வாரக்கணக்கில் இவரது அறையிலே அடைத்து வைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. மேலும், ஆஸ்பிரின் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

நசிலி 1927 இல் மன்னரின் நான்கு மாத ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது அவருடன் சென்றார், மேலும் இவரது பிரெஞ்சு வம்சாவளியின் காரணமாக பிரான்சில் மிகவும் போற்றப்பட்டார். 1924 இல் பாராளுமன்றம் தொடங்கப்பட்டவுடன், விருந்தினர் அமருமமிடத்தின் ஒரு சிறப்புப் பிரிவில் அமர்ந்து, திறப்பு விழாவில் அரச பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார். [2]

இறப்பு தொகு

நசிலி சப்ரி, 29 மே 1978 அன்று தனது 83 வயதில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸில் இறந்தார். [8]

மேற்கோள்கள் தொகு

  1. Rizk, Yunan Labib (13–19 April 2006). "A palace wedding". Al-Ahram Weekly (790). http://weekly.ahram.org.eg/2006/790/chrncls.htm. பார்த்த நாள்: 27 February 2010. "... Britain granted the rulers among the family the title of sultan, a naming that was also applied to their wives.". 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Rosten, David B (2015), "Queen Nazli Sabri", The Last Cheetah of Egypt: A Narrative History of Egyptian Royalty from 1805 to 1953, iUniverse, ISBN 978-1-4917-7939-2
  3. Samir Raafat (March 2005). "Women whose husbands ruled the realm" (PDF). Egyptian Europe Organization. Archived from the original (PDF) on 7 September 2013. பார்க்கப்பட்ட நாள் 6 September 2013.
  4. 4.0 4.1 Hassan Hassan. In the House of Muhammad Ali: A Family Album, 1805-1952. https://books.google.com/books?id=O0T5Yx6gyUgC&pg=PA46. 
  5. Ahmed Maged (6 February 2008). "Revealing book on Queen Nazli depicts her tragic life in exile". Daily News Egypt (Cairo). http://www.masress.com/en/dailynews/113772. 
  6. Rosten, David B. (2015) (in en). The Last Cheetah of Egypt: A Narrative History of Egyptian Royalty from 1805 to 1953. iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4917-7939-2. https://books.google.com/books?id=Z7guCwAAQBAJ&pg=PT109. 
  7. "Revealing book on Queen Nazli depicts her tragic life in exile". 2008-02-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-31.
  8. "Nazli".

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nazli Sabri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிலி_சப்ரி&oldid=3883396" இலிருந்து மீள்விக்கப்பட்டது