நசீர் அமினுதீன் தாகர்

உஸ்தாத் நசீர் அமினுதின் தாகர் (Nasir Aminuddin Dagar; 20 அக்டோபர் 1923, இந்தியாவின் இந்தோர் – 28 டிசம்பர் 2000 கொல்கத்தா, இந்தியா ), தாகர் கரானாசைச் சேர்ந்த (இசைப் பள்ளி) [1][2] ஒரு இந்திய துருபத் பாடகராவார். தாகர்-வாணி பாணியில் துருபத் பாடும் நான்கு சகோதரர்களில் இவர் இரண்டாவது மூத்தவர்.[1][3]

அமினுதீன் தாகர்
பிறப்புநசீர் அமினுதீன் தாகர்
20 அக்டோபர் 1923
இந்தோர், இந்தோர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு28 டிசம்பர் 2000
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிபாடகர் - துருபத் பாணி
இந்துஸ்தானி இசை
விருதுகள்

இவர் மூத்த தாகர் சகோதரர்களின் பழம்பெரும் ஜுகல்பந்தி அல்லது இரட்டையரில் இளைய சகோதரராகவும் நினைவுகூரப்படுகிறார்.[2] இவரும் அவரது மூத்த சகோதரர் உஸ்தாத் நசீர் மொய்னுதீன் தாகரும், தாகர் கரானாவில் தங்கள் தந்தை உஸ்தாத் நசிருதீன் கான் தாகரின் மரணத்திற்குப் பிறகு வீழ்ச்சியடைந்த துருபத் பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர். உஸ்தாத் நசிருதின் கான் பத்து வருடங்கள் தனது இரு மூத்த மகன்களுக்கு தனது இசை அறிவை வழங்கினார். உஸ்தாத் நசிருதீன் கானின் மறைவுக்குப் பிறகு, சகோதரர்கள் உஸ்தாத் ரியாசுதீன் கான் மற்றும் உஸ்தாத் ஜியாவுதீன் கான் தாகர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றனர்.[3][ –[1]

விருதுகள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Nasir Aminuddin Dagar profile on Encyclopedia Britannica Published 24 December 2021, Retrieved 8 January 2022
  2. 2.0 2.1 "Dagar Dhrupad Sangeet Ashram". Dhrupadsangeetashram.com website. Archived from the original on 21 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  3. 3.0 3.1 Maestros - Nasir Aminuddin Dagar (a profile) dhrupad.info website, Retrieved 8 January 2022
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. September 2014. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.
  5. "SNA: List of Akademi Awardees (see (Music - Vocal) section of the list)". Sangeet Natak Akademi website. Archived from the original on 17 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 January 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீர்_அமினுதீன்_தாகர்&oldid=3793220" இலிருந்து மீள்விக்கப்பட்டது