நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு

நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு (ந.சு.ஜெ.கு) ஒரு இந்திய கிறிஸ்தவர்களின் சமயப்பரப்பு இயக்கம் ஆகும். இந்திய மிஷனரிகளின் வேலை மூலம், 1100 க்கும் அதிகமான சர்ச்சுகளும் 6600 சபைகளுக்கும் மேல் நிறுவப்பட்டுள்ளன.    

வரலாறு தொகு

முந்தைய காலத்தில் பிரதான முக்கியத்துவம் நாட்டிற்கு நற்செய்தியை அறிவிப்பதற்கே கொடுக்கப்பட்டது. 1950 களின் பிற்பகுதியில், தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் இந்த இயக்கம் தொடங்கியது. பி. சாமுவேல் 1952 இல் இந்தியாவில் இயங்கும் வி.பி.எஸ் (விடுமுறை வேதாகம பள்ளி) இயக்கத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். சாம் கமலேஷன், தியோடர் வில்லியம்ஸ் உட்பட சில இளைஞர்கள் அவருக்கு உதவினார்கள். 1937இல், உலக சுவிசேஷ மிஷன் தென் இந்தியா பைபிள் நிறுவனத்தைத் தொடங்கியது (இப்போது SIBS) இது இந்தியாவில் விடுமுறை வேதாகமப்பள்ளி இயக்கத்தை உருவாக்கியது. 1952 ஆம் ஆண்டில், தெற்கு தமிழ்நாட்டில் கோவில்பட்டி என்று ஒரு சிறிய கிராமத்தில், 75 குழந்தைகள் மற்றும் 8 ஆசிரியர்களுடன் ஒரு வி.பி.எஸ் அமர்வு நடைபெற்றது.

பின்னர், 1959 டிசம்பர் 26-ஆம் தேதி, தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தின் கோவில்பட்டி, 211- ல் தணஸ்கோடி  தெருவில், சுமார் 25 விடுமுறை வேதாகம பள்ளி நண்பர்கள் (இளைஞர்கள் ஈடுபட்டனர்) கூடினர். அவர்கள் ஒரு பிரார்த்தனை இயக்கத்தைத் தொடங்கினர். இது பின்னர்   நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு என பெயரிடப்பட்டது. அந்த நேரத்தில் அது பிரார்த்தனை குழு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. ஒரு அமைப்போ, ஆலயமோ அல்லது சங்கமோ அல்ல. இந்த குழு தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும் சிறிய பிரார்த்தனை   குழுக்களைத் தொடங்க ஆரம்பித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆயர் ஜெபராஜ் ந.சு.ஜெ.கு  இன் முதலாவது பாதுகாவலர் ஆவார். பின்னர் மெட்ராஸ் மறைமாவட்டத்தின் ஆயர் லெஸ்லி நியூபிகின் இந்த இயக்கத்தின் பாதுகாவலர் ஆனார். ந.சு.ஜெ.கு வேலை பார்க்கும் போது, "இந்த உள்நாட்டு இயக்கம் பரிசுத்த ஆவியின் செயலாகும்" என அவர் கூறினார். அவரது ஆலோசனையை தொடர்ந்து, அதன் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது. உலகளாவிய ஆலயங்களின் மூன்று வரலாற்று சடங்குகள், அமைப்பின் நம்பிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். ந.சு.ஜெ.கு திருச்சபையின் ஒரு அங்கமாக செயல்படுகிறது.

குறிப்புகள் தொகு