நத்வாசாரை (Nadwasaray) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மவூ மாவட்டத்திலுள்ள , கௌசி நகருக்கு வெளியே 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். நத்வாகாசு என்ற பெயராலும் இக்கிராமம் அழைக்கப்படுகிறது.

நத்வாகாசு
நத்வாசாரை
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மவூ
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,003
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
275302

2011 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இக்கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5000 முதல் 6000 பேர் ஆகும். போதுமான அளவுக்கு அடிப்படை வசதிகளும், 24 மணி நேர மின்சார வசதியும் இல்லாத ஒரு கிராமமாக நத்வாசாரை கிராமம் இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில் இங்கு ஒரு தொலைபேசி இணைப்பகம் நிறுவப்பட்டது [1]. மனிதவள மேம்பாட்டு நிறுவனம் [2] பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் இக்கிராமத்தில்தான் முதன்முதலாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியது [2]. 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இப்பள்ளிக்கூடத்தின் பெயர் பால சிசு நிகேதன் என்பதாகும். சிறுவர் மற்றும் தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி , மவூ மாவட்டத்தின் மாவட்டக் கல்வித் துறையால் எட்டாம் வகுப்பு [3] பரணிடப்பட்டது 2009-06-21 at the வந்தவழி இயந்திரம் வரையிலான நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 350 மாணவர்களுக்கு மேல் கல்வியறிவு பெறுகின்றனர். இவர்களில் 30 சதவீதம் மாணவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் [2].

மேற்கோள்கள் தொகு

  1. Parliamentary questions TELEPHONE EXCHANGES IN HARYANA AND U.P. UNSTARRED QUESTION NO 4833 ANSWERED ON 27.04.2005 available to view at [1]
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-21. பார்க்கப்பட்ட நாள் 2016-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்வாசாரை&oldid=3559983" இலிருந்து மீள்விக்கப்பட்டது