நவநீதப் பாட்டியல்

நவநீதப் பாட்டியல் என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூலாகும். பாட்டியல் என்பது தமிழில் உள்ள பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது. இதன்படி நவநீதப் பாட்டியலும், தமிழில் அமைந்த பல்வேறு பிரபந்தங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் மூன்று உறுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவை,

  1. பொருத்தவியல்
  2. செய்யுண் மொழியியல்
  3. பொது மொழியியல்

என்பனவாகும். இந்நூல், கலித்துறை என்னும் பாவகையால் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இதனைக் கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. இந் நூலில் 108 கலித்துறைப் பாடல்கள் காணப்படுகின்றன.

இந் நூலை எழுதியவர் நவநீத நடனார் என்பவர் ஆவார். அகத்தியர் எழுதிய பாட்டியல் நூலொன்றை அடியொற்றியே தாம் இந் நூலை எழுதியதாக நவநீத நடனார் அதன் சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இந் நூலின் படிகளைச் சேகரித்த உ. வே சாமிநாத ஐயர், இதனை அச்சேற்ற முயன்றார் எனினும் இவ்வெண்ணம் நிறைவேறவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீதப்_பாட்டியல்&oldid=3289457" இலிருந்து மீள்விக்கப்பட்டது