நாகர்கோவில் முன்னகர்வு முறியடிப்புச் சமர், செப்டம்பர் 2007

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செப்டம்பர் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2007 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தினர் படை முன்னகர்வை இரவு 11:30 மணியளவில் மேற்கொண்டனர். எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்ட இம்முன்னர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று போராளிகளின் உயிரழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களாவன ஆர். பி. ஜி - ஒன்று, ஏ. கே. எல். எம். ஜி - இரண்டு, ரி56 ரைபிள் - இரண்டு, ரி56 2 ரக ரைபிள் - இரண்டு, ஆர். பி. ஜி. எறிகணைகள் - ஆறு, 40 மில்லி மீட்டர் மோட்டார் எறிகணைகள் - மூன்று, ஏ. கே. மேகசீன்கள் - நாட்பத்து இரண்டு, ஏ. கே. டிரம் மேகசீன்கள் - நான்கு, கைக்குண்டுகள் - பதினான்கு போன்றனவையாகும். இலங்கை இராணுவத்தரப்பினர் தம்முள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 7 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.