நாட்டார்மங்கலம், உசிலம்பட்டி

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நாட்டார்மங்கலம் (Nattarmangalam), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த நாட்டார்மங்கலம் ஊராட்சியில்[1] உள்ள ஒரு கிராமம் ஆகும். மேலும் இது உசிலம்பட்டி வட்டத்தின் சிந்துபட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஒன்றாகும். [2] நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைவிடம் தொகு

செல்லம்பட்டியிலிருந்து 1 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் நாட்டார்மங்கலம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 481 வீடுகள் கொண்ட நாட்டார்மங்கலம் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,731 ஆகும். சராசரி எழுத்தறிவு 73.39%. மக்கள் தொகையில் பட்டியல் சமூத்தினர் 691 ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள் தொகு

  1. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  2. உசிலம்பட்டி வட்டத்தின் பிர்க்காக்களும், 54 வருவாய் கிராமங்களும்
  3. Nattarmangalam Population

வெளி இணைப்புகள் தொகு