நான்சி ஜோ பவல்

நான்சி ஜோ பவல் (English: Nancy Jo Powell) (பிறப்பு - 1947) 2012 ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமனம் [1] செய்யப்பட்டார். நேபாளத்துக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய பின் நான்சி ஜோ பவல் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பொது இயக்குனராக பதவியேற்றார். 1977-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு விவகாரத் துறையில் சேர்ந்த அவர் அதற்குப் பின் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

நான்சி ஜோ பவல்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 2012

[2] இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் நான்சி ஜோ பவல் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய பதவிகள் தொகு

  • அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொது இயக்குனர், 2009 - 2012
  • நேபாளத்துக்கான அமெரக்க தூதர், ஜூலை 16, 2007 - 2009
  • தெற்கு ஆசியாவுக்கான தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி, 2006 - 2007
  • எவியான் இன்ப்லுவென்ஸா உட்பட தொற்றுநோய்கள் தடுப்பு இயக்கத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர், 2006.
  • சர்வதேச போதை தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறையின் துணைச் செயலர், மார்ச் 14 - நவம்பர் 25, 2005.
  • அமெரிக்க சட்ட விவகாரத் துறையின் துணைச் செயலாளர், நவம்பர் 2004 - மார்ச் 2005.
  • பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்ட் 9, 2002 - அக்டோபர் 2004.
  • கானாவுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்ட் 14, 2001 - மே 2002.
  • ஆப்பிரிக்க விவகாரத் துறையின் துணைச் செயலர், ஜனவரி 2001 - ஜூன் 2001.
  • உகாண்டாவுக்கான அமெரிக்க தூதர், 1997 - 1999
  • வங்காளதேசத்துக்கான அமெரிக்க தூதரக குழுவின் துணைத் தலைவர், 1995 - 1997
  • டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகர், 1993 - 1995.
  • கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதர், 1992 - 1993.
  • ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டிற்கான தூதரகக் குழுவின் துணைத் தலைவர், 1990 - 1992.

மேற்கோள்கள் தொகு

  1. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமனம்
  2. "இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண்". Archived from the original on 2016-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_ஜோ_பவல்&oldid=3560625" இலிருந்து மீள்விக்கப்பட்டது