நாமத சிலுமே

கர்நாடகத்தில் உள்ள இடம்

நாமத சிலுமே (Namada Chilume) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தும்கூருக்கு அருகில் உள்ள தேவராயனதுர்கத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை ஊற்று ஆகும். [1] பாறையின் மேற்பரப்பில் அமைந்துள்ள ஒரு சுனையிலிருந்து இந்த நீருற்று வெளியாகிறது. இராமர், சீதை, இலட்சுமணருடன் வனவாசத்தின் போது இங்கு தங்கியதாக செவிவழிக் கதைகள் உள்ளன. இராமர் தன் நெற்றியில் நாமம் பூச நீர் தேடினார் என்றும், தண்ணீர் கிடைக்காததால் பாறையில் அம்பு எய்ய, அந்த அம்பு பாறையை ஊடுருவி, அதனால் ஏற்பட்ட துளை வழியாக தண்ணீர் வெளியேறியது என்கின்றனர். இந்த சுனை கன்னடத்தில் நாமத சிலுமே என்று அழைக்கப்படுகிறது. அதாவது "நாமத்தின் ஊற்று". (நாம = நாமம் மற்றும் சிலுமே = ஊற்று) படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இங்குள்ள சிறிய துளையிலிருந்து ஆண்டு முழுவதும் நீரூற்று வற்றாமல் உள்ளது. இந்த ஊற்று நீர் புனித நீராக ( தீர்த்தம் ) கருதப்படுகிறது. இது தோராயமாக  தும்கூரிலிருந்து 14 ஆகும் கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. [2]

நாமத சிலுமே
Namada chilume
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தும்கூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
572 146
தொலைபேசி குறியீடு0816
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-06
இணையதளம்karnataka.gov.in

குறிப்புகள் தொகு

  1. "TUMKUR DISTRICT TOURIST PLACES".
  2. (Bangalore):27 June 2015 (English)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமத_சிலுமே&oldid=3710527" இலிருந்து மீள்விக்கப்பட்டது