நாயகனின் பயணம்

நாயகனின் பயணம் (hero's journey) என்பது உலகின் பல கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு. இதனை முதன்முதலில் அடையாளம் கண்டு வர்ணித்தவர் ஜோசப் காம்பெல் எனும் அமெரிக்கத் தொன்மவியலாளர். எனவே இது ஜோசப் காம்பெலின் தனித்தொன்மம் (monomyth) என்றும் வழங்கப்படுகிறது. 1949 இல் வெளியான ”நாயகனின் ஆயிரம் முகங்கள்” (The Hero with a Thousand Faces) எனும் ஒப்பீட்டுத் தொன்மவியல் நூலில் இதனைக் காம்பெல் அறிமுகப்படுத்தினார்.[1] எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்சின் மீது பற்று கொண்டவர் காம்பெல். எனவே ஜாய்சின் ஃபின்னகன்ஸ் வேக் என்ற புதினத்தில் இடம் பெறும் “monomyth" என்னும் பதத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.[2]

நாயகனின் பயணம்

பல காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய தொன்ம கதைகளில் பல அடிப்படை ஒற்றுமைகளும், பொதுவான பாங்குகளும் காணப்படுவதாகக் காம்பெல் கூறுகின்றார். இதனை ”நாயகனின் ஆயிரம் முகங்கள்” நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

சாதாரண உலகில் வாழும் நாயகன் ஒருவன் மீயியற்கைக் கூறுகள் நிறைந்த ஓர் பகுதிக்குள் நுழைகின்றான். வியத்தகு சக்திகளை சந்தித்து ஒரு அறுதியான வெற்றியைப் பெறுகின்றான். இந்த மர்ம சாகசத்திலிருந்து தன் சக மனிதர்களுக்கு வரங்கள் வழங்க வல்லவனாக வெற்றியுடன் திரும்புகின்றான் நாயகன்.[3]

காம்பெலும் எரிக் நாய்மான் போன்ற பிற ஆய்வாளர்களும் புத்தர், மோசே, இயேசு போன்றவர்களின் கதையாடல்களை “நாயகனின் பயண”த்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகக் கருதுகின்றனர். இவை மட்டுமல்லாமல் பல்வேறு பண்பாடுகளின் செவ்வியல் தொன்ம கதைகளும் இதே அடிப்படைப் பாணியைத் தான் கொண்டுள்ளன என்றும் காம்பெல் கூறுகின்றார்.[4] நாயகனின் பயணத்தில் 17 அடிப்படைக் கட்டங்கள் உள்ளன. ஆனால் அனைத்து நாயகனின் பயணங்களிலும் இப்பதினேழும் இடம் பெறுவதில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. Monomyth Website, ORIAS, UC Berkeley பரணிடப்பட்டது 2010-01-18 at the வந்தவழி இயந்திரம் accessed 2009-11-03
  2. Joseph Campbell Foundation - Works: Skeleton Key to Finnegans Wake, A பரணிடப்பட்டது 2017-07-11 at the வந்தவழி இயந்திரம் and Joseph Campbell, The Hero with a Thousand Faces. Princeton: Princeton University Press, 1949. p. 30, n35. Campbell cites James Joyce, Finnegans Wake. NY: Viking, 1939, p. 581
  3. Campbell, Joseph. The Hero with a Thousand Faces. Princeton: Princeton University Press, 1949. p.23.
  4. Heroic monomyth
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகனின்_பயணம்&oldid=3726045" இலிருந்து மீள்விக்கப்பட்டது