நாலிகபெட்ட அக்ராரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

நாலிகபெட்ட அக்ராரம் ( Naligabetta Agraharam) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் அச்செட்டிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டதாகவும், ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 58 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 315 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த ஊரின் பரப்பளவு 113.64 எக்டேராகும். அருகில் உள்ள ஊர் ஒசூர் ஆகும்.[2] இந்த ஊருக்கு அருகில் இரங்கோபண்டித அக்ராரம் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது.

நாலிகபெட்ட அக்ராரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

ஊர் பெயர் வரலாறு தொகு

இந்த ஊருக்கு மேற்கில் உள்ள குன்றான நாலிகபெட்டா மலையின் பெயரைச் சேர்த்து இவ்வூரை நாலிகபெட்ட அக்ராரம் என அழைக்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு தொகு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 281 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 1,247, இதில் 616 பேர் ஆண்கள், 631 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 81.99 % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 90.20 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.95 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் முன்னேறியதாக உள்ளது. [3]

குறிப்பு தொகு

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Naligabetta Agraharam". அறிமுகம். https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/hosur/naligabetta-agraharam.html. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Naligabetta Agraharam Population - Krishnagiri, Tamil Nadu". அறிமுகம். http://www.census2011.co.in/data/village/643791-naligabetta-agraharam-tamil-nadu.html. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாலிகபெட்ட_அக்ராரம்&oldid=2661979" இலிருந்து மீள்விக்கப்பட்டது