நிகோலாய் நாசனோவ்

நிகோலாய் விக்டோரோவிச் நாசனோவ் (ஆங்கிலம்: Nikolai Viktorovich Nasonov; உருசியா: Николай Викторович Насонов)14 பிப்ரவரி 1855 - 11 பிப்ரவரி 1939) என்பவர் உருசிய விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் 1879-ல் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இப்பல்கலைக்கழக விலங்கியல் அருங்காட்சியகத்தில் உதவியாளரானார். 1887-ல் தனது முனைவர் பட்டத்தினை முடித்த பின்னர், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பின்னர் ட்ரைஸ்டே, மர்சேய் மற்றும் வார்சாவாவில் பணியாற்றினார். 1890ஆம் ஆண்டில் இவர் எறும்புகளின் பரிணாம வளர்ச்சியினை விவரித்தார்.[1] திசம்பர் 1897-ல் இவர் தொடர்பாளராகவும், மார்ச் 1906-ல் உருசியா அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] விலங்கியல் பற்றிய தனது ஆய்வுகளுக்கு மேலதிகமாக, நசோனோவ் மார்க்சியத்தின் அடிப்படையிலான இனப் பிரச்சனையைக் கையாண்டார். கிழக்கின் உழைப்பாளர்களின் பொதுவுடைமை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் மாதாந்திர இதழான ரெவூலூசினோய் வோசுதாக் (Revolutsionnyi vostok) இதழில் கட்டுரைகளை வெளியிட்டார்.[3] இனவாதம் குறித்த எண்ட்ரே சிக்கின் அணுகுமுறையை இவரது கட்டுரைகள் விமர்சித்தன.[3]

நிகோலாய் நாசனோவ்
பிறப்பு(1855-02-14)14 பெப்ரவரி 1855
மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்பு11 பெப்ரவரி 1939(1939-02-11) (அகவை 83)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநாசனோவ் இயக்குநீர், நாசனோவ் சுரப்பி

நசோனோவிற்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். மூன்று மகன்களில் ஆர்சனி வரலாறு, டிமிட்ரி உயிரியல் மற்றும் வெசெவோலோட் பொறியியல் துறைகளிலும் மகள் அன்டோனினா வரலாற்றுத் துறையிலும் ஆய்வில் சிறந்து விளங்கினர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Насонов, Николай Викторович" in Brockhaus and Efron Encyclopedic Dictionary
  2. Насонов Николай Викторович. Russian Academy of Sciences
  3. 3.0 3.1 Irina Filatova (2007). "Anti-Colonialism in Soviet African Studies (1920s–1960)". In Paul Tiyambe Zeleza (ed.). The Study of Africa. Vol. 2. Dakar: Codesria. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-86978-198-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோலாய்_நாசனோவ்&oldid=3747282" இலிருந்து மீள்விக்கப்பட்டது