நிக்கல்(II) அயோடைடு

நிக்கல்(II) அயோடைடு (Nickel(II) iodide) என்பது NiI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இணைக்காந்தமான இச்சேர்மம் கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. தண்ணீரில் எளிதில் கரைந்து நீரணைவுச் சேர்மங்களின் நீலப்-பச்சை நிறக் கரைசலைக் கொடுக்கிறது[1]. இந்நிறம் குறிப்பாக நீரேற்றம் பெற்ற நிக்கல்(II) சேர்மங்களுக்கு உரியது ஆகும். ஓரியல்பு வினையூக்கியாக சில பயன்களை இச்சேர்மம் கொண்டுள்ளது.

நிக்கல்(II) அயோடைடு
Nickel(II) iodide hexahydrate, NiI2•6H2O
Nickel(II) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) அயோடைடு
வேறு பெயர்கள்
நிக்கலசயோடைடு
இனங்காட்டிகள்
13462-90-3 Y
InChI
  • InChI=1S/2HI.Ni/h2*1H;/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26038
  • [Ni](I)I
பண்புகள்
I2Ni
வாய்ப்பாட்டு எடை 312.50 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம் (நீரிலி)
நீலப் பச்சைத் திண்மம் (அறுநீரேற்று)
அடர்த்தி 5.384 கி/செ.மீ3
உருகுநிலை 780 °C (1,440 °F; 1,050 K) (நீரிலில்)
43 °செ (அறுநீரேற்று, நீரை இழக்கிறது)
124.2 கி/100 மி.லி (0 °செ)
188.2 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் ஆல்ககால்கள்
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(II) குளோரைடு, நிக்கல்(II) புரோமைடு, நிக்கல்(II) புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட் அயோடைடு, தாமிர அயோடைடு,
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமைப்பு மற்றும் தயாரிப்பு தொகு

நீரற்ற நிக்கல்(II) அயோடைடு CdCl2 சேர்மத்தின் தலைமைப்பண்பு கூறுகளுடன் படிகமாகிறது. ஒவ்வொரு நிக்கல்(II) மையமும் எண்முக ஒருங்கிணைவு வடிவத் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

ஐந்து நீரேற்றை நீர்நீக்கம் செய்து NiI2 தயாரிக்கப்படுகிறது[2].

NiI2 எளிமையாக நீரேற்றம் அடைகிறது. நிக்கல் ஆக்சைடு, நிக்கல் ஐதராக்சைடு அல்லது நிக்கல் கார்பனேட்டுடன் ஐதரயோடிம் அமிலத்தில் கரைத்து இவற்றைத் தயாரிக்கலாம். நீரிலி வடிவ நிக்கல்(II) அயோடைடை, தூளாக்கப்பட்ட நிக்கலுடன் அயோடின் சேர்த்துத் தயாரிக்கலாம்.

சில தொழிற்துறை பயன்களையும் நிக்கல்(II) அயோடைடு கொண்டுள்ளது. கார்பனைலேற்ற வினைகளில் வினையூக்கியாக இது செயலாற்றுகிறது[3] . கரிமத் தொகுப்புவினைகள் சிலவற்றில் பொருத்தமான வினையாக்கியாக, குறிப்பாக சமாரியம்(II) அயோடைடுடன் இணைந்துச் செயல்படுகிறது[4].

மேற்கோள்கள் தொகு

  1. Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
  2. Laird G. L. Ward, "Anhydrous Nickel (II) Halides and their Tetrakis(Ethanol) and 1,2-Dimethoxyethane Complexes" Inorganic Syntheses, 1972, Volume 13, Pages: 154–164, 2007. எஆசு:10.1002/9780470132449.ch30
  3. W. Bertleff, M. Roeper, X. Sava, "Carbonylation" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim, 2003. எஆசு:10.1002/14356007.a05_217.
  4. Shinichi Saito, Nickel(II) Iodide" in Encyclopedia of Reagents for Organic Synthesis, John Wiley & Sons, 2008. எஆசு:10.1002/047084289X.rn00843. Article Online Posting Date: March 14, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_அயோடைடு&oldid=3384819" இலிருந்து மீள்விக்கப்பட்டது