நிக்கல் பிசு(இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு)

நிக்கலும் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டும் சேர்ந்து உருவாகும் ஒருங்கிணைவுச் சேர்மம்

நிக்கல் பிசு(இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு) (Nickel bis(dimethyldithiocarbamate)) என்பது Ni(S2CNMe2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள Me என்பது மெத்தில் தொகுதியைக் குறிக்கிறது. நிக்கல் பிசு (டைமெத்தில்டைதயோகார்பமேட்டு) என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். நிக்கலும் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டும் சேர்ந்து உருவாகும் ஒருங்கிணைவுச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. அதிக அளவு நிக்கல்(II) அயனியின் பிசு(ஈரால்கைல்யிருதயோகார்பமேட்டு) சேர்மங்களுக்கு இதுவொரு முன்மாதிரி சேர்மமாகும். மேலும் இது பல்வேறு மாறுபட்ட கரிமப் பொருள்களைக் கொண்டுள்ளது, அவை அனைத்தும் ஒரே மாதிரியான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. பூஞ்சைக் கொல்லியாக நிக்கல் பிசு (இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு) சந்தைப்படுத்தப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய அணைவுச் சேர்மங்கள் பலபடிகளில் நிலைநிறுத்திகளாகப் பயன்படுகின்றன [1] .

நிக்கல் பிசு(இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு)
பெயர்கள்
வேறு பெயர்கள்
சாங்கெல், எத்தில் நிக்லேட்டு; நிக்கல் டைமெத்தில்டைதயோகார்பமேட்டு
இனங்காட்டிகள்
14484-64-1
ChemSpider 76647
EC number 239-560-8
InChI
  • InChI=1S/2C3H7NS2.Ni/c2*1-4(2)3(5)6;/h2*1-2H3,(H,5,6);/q;;+2/p-2
    Key: BLCKKNLGFULNRC-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 84966
  • CN(C)C(=S)[S-].CN(C)C(=S)[S-].[Ni+2]
பண்புகள்
C6H12N2NiS4
வாய்ப்பாட்டு எடை 299.11 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பும் கட்டமைப்பும் தொகு

நிக்கல்(II) மற்றும் இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு உப்புகளின் நீர்த்த கரைசல்களைச் சேர்க்கும்போது கருப்பு நிற வீழ்படிவாக நிக்கல் பிசு (இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு) உருவாகிறது. கட்டமைப்பு மற்றும் பிணைப்பைப் பொறுத்த அளவில் நிக்கல் சதுரத்தள கட்டமைப்பில் காணப்படுகிறது. இந்த அணைவுச் சேர்மம் டயாகாந்தப்பண்பு கொண்டதாகவும் உள்ளது [2].

மேற்கோள்கள் தொகு

  1. Rüdiger Schubart (2000). "Dithiocarbamic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a09_001. 
  2. D. Coucouvanis. "The Chemistry of the Dithioacid and 1,1-Dithiolate Complexes". Progress in Inorganic Chemistry 11: 233–371. doi:10.1002/9780470166123.ch4.