நிக்கி பிரதான்

விளையாட்டு வீரர்

நிக்கி பிரதான் (Nikki Pradhan) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 8 இல் இவர் பிறந்தார். சார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கிடைத்த முதலாவது பெண் வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரர் நிக்கி பிரதான் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [3]. தலைநகரமான ராஞ்சியிலுள்ள கூண்டி மாவட்டம், மூர்து வட்டாரம், கிசால் கிராமத்தைச் சேர்ந்த சோம பிரதான் மற்றும் இயிட்டான் தேவி ஆகியோர் இவரது பெற்றோர்கள் ஆவர். பாரி்யட்டு பெண்கள் வளைகோல் பந்தாட்ட மையத்தில் [4] நிக்கி பிரதான் பயிற்சி பெற்று உருவானார். இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மகளிர் அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

நிக்கி பிரதான்
Nikki Pradhan
தனித் தகவல்கள்
முழுப் பெயர்நிக்கி பிரதான்
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்8 திசம்பர் 1993 (1993-12-08) (அகவை 30)[1]
பிறந்த இடம்சார்க்கண்ட், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவளைகோல் பந்தாட்டம்
சங்கம்சார்க்கண்ட், இரயில்வே[2]

பங்கேற்ற அனைத்துலகப் போட்டிகள் தொகு

  • 2011 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் [5].
  • 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பைப் போட்டியில் போட்டியில் வெள்ளிப் பதக்கம். ஆனால் காயம் காரணமாக இவர் ஆட்டத்தில் விளையாடவில்லை.
  • 2012 ஆசியக் கோப்பை போட்டியில் இவர் பங்கேற்றார்.
  • 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார் [6].

மேற்கோள்கள் தொகு

  1. "Nikki Pradhan". rio2016.com. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Our girl Nikki makes it to Rio- Khunti lass becomes state's first woman hockey player at Olympics". telegraphindia.com. Archived from the original on 26 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Jharkhand's Nikki Pradhan in hockey team for Rio Olympic". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
  4. "Nikki Pradhan first woman hockey player from Jharkhand at Olympics". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
  5. "Nikki Pradhan". sportingindia.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Rio 2016: Sushila Chanu to lead Indian women's hockey team at Olympics". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_பிரதான்&oldid=3587345" இலிருந்து மீள்விக்கப்பட்டது