நியாய வணிகம்

நியாய வணிகம் என்பது வளர்ச்சியடைந்துவரும் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மேம்பட்ட வணிகச் சூழலை வழங்குவதையும், அவர்களிடம் பேண்தகுவியலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சமூக இயக்கம் ஆகும். பொதுவாக நியாய வணிக சான்றளிப்பு வணிகங்கள் உற்பத்தியாளர்களிடம் இலாபத்தை மட்டும் நோக்காக் கொண்ட வணிகங்ளையும் விட கூடிய விலையில் பொருட்களைக் கொள்வனவும் செய்வார்கள். இதனூடாக உற்பத்தி தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியத்தையும் பணிச் சூழலையும் வழங்குகிறார்கள். மேலும் உயர்ந்த சமூக சூழலிய சீர்தரங்களையும் இவர்கள் வேண்டி நிற்பார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாய_வணிகம்&oldid=1418773" இலிருந்து மீள்விக்கப்பட்டது