நியோடிமியம் டங்சுடேட்டு

நியோடிமியம் டங்சுடேட்டு (Neodymium tungstate) Nd2(WO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். நியோடிமியமும் டங்சுடிக் அமிலமும் சேர்ந்து நியோடிமியம் டங்சுடேட்டு என்ற இந்த உப்பு உருவாகிறது. நீரேற்றப்பட்ட வெளிர் ஊதா நிற படிகங்களான இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது.

நியோடிமியம் டங்சுடேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) உல்பிரமேட்டு
நியோடிமியம்(III) டங்சுடேட்டு
நியோடிமியம்உல்பிரமேட்டு
இனங்காட்டிகள்
14014-27-8
EC number 237-828-9
InChI
  • InChI=1S/2Nd.12O.3W/q2*+3;12*-2;;;
    Key: GXEGJIVZLXITCF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44148797
  • [O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[O-2].[Nd+3].[Nd+3].[W].[W].[W]
பண்புகள்
Nd2(WO4)3
வாய்ப்பாட்டு எடை 1031,9968 கி/மோல் (நீரிலி)
1194,13432 கி/மோல் (ஒன்பது நீரேற்று)
தோற்றம் வெளிர் ஊதா நிற படிகங்கள்[1]
அடர்த்தி 7,02 கி/செ.மீ3
உருகுநிலை 1,135 °C (2,075 °F; 1,408 K)
21 மில்லி கிராம்/100 மில்லி லிட்டர் (20 °செல்சியசு)
27 மில்லி கிராம்/100 மில்லி லிட்டர் (100 °செல்சியசு)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம் மாலிப்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

 
 

பண்புகள் தொகு

நியோடிமியம் டங்சுடேட்டு ஒற்றைச் சரிவு படிக அமைப்பில் படிகத்தை உருவாக்குகிறது. இடக்குழு A 2/a, லட்டு மாறிலிகள் a = 1.151 nm, b = 1.159 nm, c = 0.775 nm மற்றும் β = 109.67 °.என்பவை இதன் அடையாள ஆள்கூறுகளாகும்.[2] எத்தனால் மற்றும் அசிட்டோனில் கரையாது ஆனால் தண்ணீரில் சிறிது கரையும். Nd2(WO4)3·9H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒன்பது நீரேற்று சேர்மத்தை இது உருவாக்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Villars, Pierre; Cenzual, Karin; Gladyshevskii, Roman (2017-07-24). Handbook (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-043655-6.
  2. Ternary Compounds, Organic Semiconductors. Vol. 41E. Landolt-Börnstein. O. Madelung, U. Rössler, M. Schulz. 2000. pp. 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-66781-0. {{cite book}}: External link in |ref= (help)