நிற அடர்த்தி

நிற அடர்த்தி (colour depth) எனப்படுவது, ஒரு படத்திலுள்ள படச்சில்கள் (pixel) எத்தனை வர்ணங்களைப் பயன்படுத்தி உருவாகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது[1][2][3][4]. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மென்பொருளால் கட்டுப்படுத்தலாம். 1 பிட் என குறிப்பிட்டால் அது இரண்டு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட படம். 2 பிட் எனில் 22 = 4 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் என அறியலாம்.

1 பிட் (2 வர்ணங்கள்)
2 பிட் (4 வர்ணங்கள்)
  • 1-பிட் = இரண்டு வர்ணங்கள்
  • 2-பிட் = நான்கு வர்ணங்கள்
  • 4-பிட் = பதினாறு வர்ணங்கள்
  • 8-பிட் = 256 வர்ணங்கள்
  • 24-பிட் = 16 மில்லியன் வர்ணங்கள்,

24-பிட் வர்ணமே இன்று அதிக அளவில் உள்ளது. 8-பிட் பழைய கைபேசிகளில் பயன்படுத்தப்பட்டது எனினும் இன்றய கைபேசிகளின் திரை 24-பிட் ஆக உள்ளது. பிட் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிகளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது. ஆகையால் தெளிவான காட்சியை பெறலாம் (இங்கு தெளிவான காட்சி என குறிப்பிடுவது படத்தின் தரம் அல்ல படத்திலுள்ள வர்ணத்தின் தரத்தினை மாத்திரமே).

8-பிட் வர்ணம் தொகு

 
8 பிட் (256 வர்ணங்கள்)

8-பிட் வர்ணம் எனில் இலத்திரனியல் திரையில் பயன்படுத்தப்படும் RGB (சிவப்பு-பச்சை-நீலம்) ஆகிய வர்ணங்களைப் பயன்படுத்தி வர்ணத்தை ஏற்படுத்துவதற்காக முறையே (8x8x4 = 256) என பிரிக்கப்படுகிறது. (மனித கண்ணால் சிவப்பு பச்சை வர்ணங்களைக் காட்டிலும் நீல வர்ணத்தை குறைவாகவே அடையாளம் காண முடியும்.)

நிஜ வர்ணம் 24-பிட் தொகு

 
24 பிட் (16,777,216 வர்ணங்கள்)

மிகவும் தரமான வர்ணத்தை கொடுக்ககூடியதால் நிஜ வர்ணம் எனப்படுகிறது. இதில் மிகவும் அதிக அளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது (16 மில்லியன்). 10 மில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களை மனித கண்களால் இலகுவாக அடையாளம் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ வர்ணம் தொகு

அதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.

மேற்கோள்கள் தொகு

  1. G.J. Sullivan; J.-R. Ohm; W.-J. Han; T. Wiegand (2012-05-25). "Overview of the High Efficiency Video Coding (HEVC) Standard" (PDF). IEEE Transactions on Circuits and Systems for Video Technology. http://iphome.hhi.de/wiegand/assets/pdfs/2012_12_IEEE-HEVC-Overview.pdf. பார்த்த நாள்: 2013-05-18. 
  2. G.J. Sullivan; Heiko Schwarz; Thiow Keng Tan; Thomas Wiegand (2012-08-22). "Comparison of the Coding Efficiency of Video Coding Standards – Including High Efficiency Video Coding (HEVC)" (PDF). IEEE Trans. on Circuits and Systems for Video Technology. http://iphome.hhi.de/wiegand/assets/pdfs/2012_12_IEEE-HEVC-Performance.pdf. பார்த்த நாள்: 2013-05-18. 
  3. "High Efficiency Video Coding (HEVC) text specification draft 10 (for FDIS & Consent)". JCT-VC. 2013-01-17 இம் மூலத்தில் இருந்து 2019-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191231032724/http://phenix.it-sudparis.eu/jct/doc_end_user/current_document.php?id=7243. பார்த்த நாள்: 2013-05-18. 
  4. Alberto Dueñas; Adam Malamy (2012-10-18). "On a 10-bit consumer-oriented profile in High Efficiency Video Coding (HEVC)". JCT-VC இம் மூலத்தில் இருந்து 2013-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130213060530/http://phenix.it-sudparis.eu/jct/doc_end_user/current_document.php?id=6479. பார்த்த நாள்: 2013-05-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிற_அடர்த்தி&oldid=3792012" இலிருந்து மீள்விக்கப்பட்டது