நிலிமா கோசு

இந்திய தடகள வீராங்கனை

நிலிமா கோசு (Nilima Ghose) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1935 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு பின்லாந்தின் எல்சிங்கியில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கு போட்டியில் இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்ற போது, கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற முதல் பெண் தடகள வீராங்கனை என்ற சிறப்புக்கு உரியவரானார். [1] [2] [3]

நிலிமா கோசு
Nilima Ghose
1952 ஒலிம்பிக்கில் நிலிமா கோசு
தனிநபர் தகவல்
பிறப்பு15 சூன் 1935
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஓட்டப்பந்தயம், தடைதாண்டும் ஓட்டம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)100 மீ – 12.7 (1954)
80 மீ தடைதாண்டல் – 13.07 (1952)[1]

நிலிமா கோசு 1952 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் இரண்டு போட்டிகளில் பங்கேற்றபோது அவருக்கு 17 வயதுதான். 100 மீட்டரில் அவர் முதல் சுற்று போட்டியில் ஓடினார் அணி வீராங்கனையான மேரி டிசோசா 9ஆவது சுற்றில் ஓடினார். எனவே நிலிமா கோசு ஒலிம்பிக்கு போட்டியில் ஓடிய முதல் இந்திய பெண் தடகள வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அப்போட்டியில் பந்தய தூரத்தை 13.80 வினாடிகளில் கடந்து கடைசியாக வந்ததால், இவர் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.[4] [5] சில நாட்களுக்குப் பிறகு, நிலிமா கோசு 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் போட்டியிட்டார். தனது சுற்றில் ஓடிய பேன்னி பிளாங்கர்சு -கோயனை விட இரண்டு வினாடிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்தையே பிடித்தார். [6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Nilima Ghose". Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  2. "Nilima Ghose: The teenager who helped Indian women get off the blocks in Olympics". https://olympics.com/en/featured-news/first-indian-woman-participate-olympics-helsinki-1952-nilima-ghose-athletics. 
  3. "Chronology of Important Sports Events — West Bengal". Archived from the original on 13 October 2022. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  4. "Athletics at the 1952 Helsinki Summer Games: Women's 100 metres Round One". Olympics at Sports-Reference.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  5. "Forgotten Heroes: Nilima Ghose - The first Indian woman at the Olympics". The Bridge. https://thebridge.in/athletics/forgotten-heroes-nilima-ghose-first-indian-woman-olympics/. 
  6. "Athletics at the 1952 Helsinki Summer Games: Women's 80 metres Hurdles Round One". Olympics at Sports-Reference.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலிமா_கோசு&oldid=3842261" இலிருந்து மீள்விக்கப்பட்டது