நிவ்ருதி ராய்

நிவ்ருதி ராய் (Nivruti Rai)(பிறப்பு 1969 ) என்பவர் இன்டெல் இந்தியாவின் தலைவர் மற்றும் இன்டெல் வார்ப்பாலை சேவைகளின் துணைத் தலைவர் ஆவார். இவர் நாரி சக்தி விருது பெற்றுள்ளார்.

தொழில் தொகு

நிவ்ருதி ராய் 1969ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் பிறந்தார்.[1][2] இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[3] பின்னர் திருமணம் முடிந்தவுடன் தனது இருபது வயதுகளில் அமெரிக்காவிற்குச் சென்றார். நியூயார்க்கு ரென்சீலர் பல்நுட்ப நிறுவனத்தில் கணிதம் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[1] இவர் 1994-ல் இன்டெல்லில் பணிபுரியத் தொடங்கினார். 2005-ல் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.[2] அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் இவருக்கு அடுத்த ஆண்டு வெளிநாட்டுக் குடிமகனாக நிரந்தர நுழைவுச்சீட்டு தகுதி வழங்கப்பட்டது.[2][3]

2022 வரை, இவர் இன்டெல் இந்தியாவின் தலைவராகவும், இன்டெல் வார்ப்பாலை சேவயின் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்காலத்தில் 7,000 பள்ளிகளில் 150,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.[2] 2021ஆம் ஆண்டு இவர் தி ஹிந்து பிசினஸ் லைனிடம் "அமெரிக்காவிற்கு வெளியே இன்டெல்லின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இல்லமாக இந்தியா உள்ளது, நாங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்" என்று கூறினார்.[4] டாட்டா தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் சேர்ந்தார்.[5]

அனைத்துலக பெண்கள் நாளான 2022 அன்று, ராய் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து நாரி சக்தி விருதை, கர்நாடகாவைச் சேர்ந்த ஷோபா காஸ்தி உட்பட 28 பெண்களுடன் பெற்றார்.[6] கிராமப்புற அகன்ற அலை இணைய இணைப்பு மற்றும் குறைக்கடத்தி சில்லுகளில் புதுமைகளை மேம்படுத்துவதில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Nivruti Rai" (in en). 2018. https://www.forbesindia.com/2018-wpower-trailblazers/nivruti-rai/1691/27. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Belagavi’s Devadasi crusader conferred with Naari Shakti award". 9 March 2022. https://www.newindianexpress.com/good-news/2022/mar/09/belagavis-devadasi-crusader-conferred-with-naari-shakti-award-2427935.html. 
  3. 3.0 3.1 "Nivruti Rai: Academy of Distinguished Engineers - 2009". College of Engineering (in ஆங்கிலம்). 13 December 2011. Archived from the original on 5 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.
  4. Ghosh, Debangana (9 December 2021). "India is the largest R&D house for Intel outside of US: Nivruti Rai" (in en). The Hindu Business Line. https://www.thehindubusinessline.com/info-tech/india-is-the-largest-rd-house-for-intel-outside-of-us-nivruti-rai/article37907321.ece. 
  5. Sharma, Shweta (15 July 2021). "Tata Technologies picks Intel India head Nivruti Rai as independent director". Techcircle. https://www.techcircle.in/2021/07/15/tata-technologies-picks-intel-india-head-nivruti-rai-as-independent-director. 
  6. "Shobha Gasti and Nivruti Rai from Karnataka honoured by the President" (in en). Hindustan Times. 9 March 2022. https://www.hindustantimes.com/cities/bengaluru-news/shobha-gasti-and-nivruti-rai-from-karnataka-honoured-by-the-president-101646749992326.html. 
  7. Anil, Aswetha (9 March 2022). "Who is Nivruti Rai? All you need to know about the Nari Shakti Puraskar winner" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/cities/bengaluru-news/who-is-nivruti-rai-all-you-need-to-know-about-the-nari-shakti-puraskar-winner-101646838868911.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவ்ருதி_ராய்&oldid=3689314" இலிருந்து மீள்விக்கப்பட்டது