நீதா இராமையா

நீதா ராமையா (Neeta Ramaiya, குசராத்தி: નીતા રામૈયા (நீத்தா இராமையா, பிறப்பு: 14 சூலை 1941) இந்தியாவைச் சேர்ந்த குஜராத்தி மொழிக் கவிஞரும், குழந்தைகளுக்கான எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார். இவரின் கவிதைகள் சமகாலத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதா ராமையா
பிறப்பு14 சூலை 1941 (1941-07-14) (அகவை 82)
மோர்பி, பிரித்தானிய இந்தியா (தற்போதைய குசராத்து, இந்தியா)
தொழில்கவிஞர்,

குழந்தைகள் எழுத்தாளர்

மொழிபெயர்ப்பாளர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை முனைவர்
கல்வி நிலையம்திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம்
கையொப்பம்

வாழ்க்கை தொகு

நீதா ராமையா 1941 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி மோர்பியில் (தற்போதைய இந்தியாவின் குஜராத்தில் ) பிறந்துள்ளார். 1957 ஆம் ஆண்டில் பள்ளிப்படைப்பை முடித்து 1960 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் இளங்கலையும் முடித்துள்ளார்.

தனது முதுகலைப் படிப்பை 1962 ஆம் ஆண்டில் முடித்து 1966 ஆம் ஆண்டு வரையிலும் பம்பாயின் (இப்போது மும்பை ) மாட்டுங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிக்சா மன்டல் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் [1] கனடிய ஆய்வுகள் மையத்தின் இயக்குநராகவும், பணிபுரிந்துள்ளார், மேலும் மதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்தாளர் தொகு

கவிதை தொகு

ஆணாதிக்கத்திற்கு சவால் விடும் ஒரு பெண்ணியக் கவிஞராகத் தன்னை சித்தரிக்கும் நீதா, அவரது கவிதைத் தொகுப்பான தக்லா தாரிகே ஸ்ட்ரீ (Dakhla Tarike Stree-1994) [2] என்பதில் எழுதப்பட்டுள்ள அவரது கவிதைகளில் பெண் இதயத்தின் உணர்ச்சிகளையும் சமத்துவத்தையும் நீதியையும் கோரும் நம்பிக்கையான குரலையும் பிரதிபலிக்க்கும் வகையில் எழுதியுள்ளார்.

  • ஷப்தனே ராஸ்தே (Shabdane Raste-1989),
  • தே ஜல்பிரதேஷ் சே (e Jalpradesh Chhe-1998),
  • ஈரான் தேஷே (Iran deshe-2002),
  • ரங் டாரியோ ஜி ரே (Rang Dariyo Ji Re-2008), [3]
  • மாரி ஹதெலிமா (Mari Hathelima-2009),
  • ஜசுத்னா பூல் (Jasudna Phool- 2013) ஆகியவை இவரது மற்ற கவிதைத் தொகுப்புகளாகும்.[4]

இவை தவிர அவ்வப்போது சமகால நிகழ்வுகளைப் பொறுத்து கவிதைகளை எழுதி நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார்.

குழந்தை இலக்கியம் தொகு

குழந்தைகளுக்கான கவிதை, பாடல்கள் மற்றும் கதைகளை எழுதி, குழந்தை இலக்கியத்திலும் குசராத்தி மொழியில் இவர் பங்களித்துள்ளார்.

  • தமச்சக்டி (Dhamachakdi - 1986) மற்றும்
  • கில் கில் கில் துருக் துருக் (Khil Khil Khil Turuk Turuk- 1998) ஆகியவை இவரது குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்புகளாகும்.
  • தானே பரணியே போதாது (Tane Paraniye Podhadu- 2006) என்பது இவரால் தொகுக்கப்பட்டுள்ள தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு நூலாகும்.
  • லால்குன்வர்னி குக்ரே கூக் (Lalkunwarni Kukre Kook- 1998) இவரால் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைபுத்தகமாகும்.

மொழிபெயர்ப்பாளர் தொகு

கனேடிய கவிஞர் மார்கரெட் அட்வுட்டின் சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளை 1991 ஆம் ஆண்டில் காவ்யவிஷ்வா ஷ்ரேனியின்[5] கீழ் பனு ரா ஜுவு சே (Panu Rah Juve Chhe - 1991) என பெயரிட்டு தொகுத்து வெளியிட்டுள்ள கனடிய கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலாகும்.

  • கனடியன் சப்தகாண்ட் பாரத்னா பிரவாசே (Canadian Shabdakhand Bharatna Pravase- 1995),
  • ஸ்த்ரீசுக்தா (Streesukta- 2002, மராத்தி கவிதைகள்),
  • ஷேக்ஸ்பியர் நா போல்டா பட்ரோ (Shakespeare na Bolta Patro- 2003),
  • ஏக் அஜன்யோ மாரி நவ்மா (Ek Ajanyo Mari Navma- 2007, கதை),
  • ஈரான் தேஷ்னோ சமஸ்கிருதிக் தப்கர்: பார்சியன் கஹேவடோ (Iran Deshno Sanskrutik Dhabkar: Parsian Kahevato - 2007) ஆகியவை இவரது மொழிபெயர்ப்பு புத்தகங்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. India's Foreign Policy in the New Millennium: The Role of Power. Atlantic Publishers & Dist.
  2. Gujarat.
  3. Brahmabhatt, Prasad. અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (in குஜராத்தி).Brahmabhatt, Prasad (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ [History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era] (in Gujarati). Ahmedabad: Parshwa Publication. p. 142. ISBN 978-93-5108-247-7.
  4. Women Writing in India: The twentieth century. p. 634. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)
  5. Shannon Hengen; Ashley Thomson (22 May 2007). Margaret Atwood: A Reference Guide, 1988-2005. Scarecrow Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6668-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதா_இராமையா&oldid=3893422" இலிருந்து மீள்விக்கப்பட்டது