நீந்தும் கலைமான்

நீந்தும் கலைமான் (Swimming Reindeer) என்பது, தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, 13,000 ஆண்டுகள் பழமையான ஒரு சிற்பத்தைக் குறிக்கும். மாமூத் தந்தத்தின் நுனிப் பகுதியில், இரண்டு கலைமான்கள் நீந்துவது போல் செதுக்கப்பட்டுள்ள இச் சிற்பம் பிரான்சில் கண்டெடுக்கப்பட்டது. இச் சிற்பத்தை 1866 ஆம் ஆண்டில் இரண்டு துண்டுகளாகக் கண்டுபிடித்தனர். ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அபே என்றி பிரேயில் என்பவர் இவ்விரு துண்டுகளும் பொருந்தக்கூடியன என்றும் அவை, இரண்டு கலைமான்கள் ஒன்றின் பின்னால் இன்னொன்று நீந்துவதுபோல் அமைந்த ஒரே சிற்பத்தின் பகுதிகள் என்றும் உணர்ந்தார்.[1]

நீந்தும் கலைமான்
13,000 ஆண்டுகள் பழமையான நீந்தும் கலைமான் சிற்பம்
செய்பொருள்மாமூத் தந்தம்
அளவு207 மிமீ நீளம்
உருவாக்கம்13,000 ஆண்டுகளுக்கு முன்
கண்டுபிடிப்புபுரூனிக்கெல், பிரான்சு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவுPalart.550

அடிக்குறிப்புகள் தொகு

  1. The swimming reindeer; a masterpiece of Ice Age art, Jill Cook, bradshawfoundation.com, accessed 2 ஆகத்து 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீந்தும்_கலைமான்&oldid=3160266" இலிருந்து மீள்விக்கப்பட்டது