நீரா ஒரு நோர்வே நிறுவனம். கம்பியற்ற இணைப்புக்களை மைக்ரோவேவ் (Microwave) மற்றும் செய்மதியூடாக வழங்கிவருகின்றது. இந்த நிறுவனம் உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளதுடன் 1500 இற்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகமானது பேர்கன், நோர்வே இல் அமைந்துள்ளது.

இதன் சர்வதேச அழைப்புக் குறியீடானது +871, +872, +873 , +874 ஆகும் இது பூமிக்குச் சார்பான நான்கு செய்மதியூடாகத் தொலைத் தொடர்பினை வழங்கிவருகின்றது. இலங்கையில் இது இந்து மகா சமுத்திரச் செய்மதி மற்றும் அந்தாலிந் சமுத்திரச் செய்மதியூடாக இணைப்பை வழங்கிவருகின்றது.

இது பிரத்தியேக ஒலியழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பல்வேறுபட்ட சர்வதேச ஆபத்துவி நிறுவனங்கள் இந்தத் தொலைத் தொடர்பாடலிற்காப் பாவிக்கின்றன. இந்த அமைப்புக்கள் வேலைசெய்யும் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பாடலகள் மிகவும் பின்தங்கியுள்ளதால் இவ்வாறான தொலைத்தொடர்பாடல் உபகரணங்களைப் பாவித்துவருகின்றனர்.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரா&oldid=1346664" இலிருந்து மீள்விக்கப்பட்டது