நீர் வள அமைச்சகம் (இந்தியா)

நீர் வள அமைச்சகம் (Ministry of water resources ,India) இந்திய அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்தியாவின் நீர் வளங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இன்றியமையாத விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் வடிவமைப்பது இந்த அமைச்சகத்தின் பொறுப்பு. 1985ல் பாசனம் மற்றும் மின்சக்தி அமைச்சகத்தினை (Ministry of Irrigation and Power) பிரித்து, பாசனத் துறையை நீர் வள அமைச்சகமாக மாற்றினர்.[2]. 2014 ஜூலையில் இந்த அமைச்சரகமானது நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது. மத்திய அரசின் கொள்கை முடிவான கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்துதலைத் தீவிரமாக்கவே இது தனி அமைச்சகமாகவே ஏற்படுத்தப்பட்டது. [3]

நீர் வள அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்தியாஇந்தியக் குடியரசு
தலைமையகம்நீர் வள அமைச்சகம்
சராம் சக்தி பவன்
ரபி மார்க்
புது தில்லி
ஆண்டு நிதிUSD 243134089[1]
அமைச்சர்
வலைத்தளம்wrmin.nic.in

நிறுவனங்கள் தொகு

  • மத்திய நிலத்தடி நீர் வாரியம் ( Central Ground Water Board )
  • மத்திய நீர் ஆணையம் ( Central Water Commission )
  • மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் ( Central Soil and Materials Research Station )
  • மத்திய தண்ணீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம் ( Central Water and Power Research Station )
  • தேசிய நீர்ஆற்றல் நிறுவனம், ரூர்கி ( National Institute of Hydrology, Roorkee )
  • தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் ( National Projects Construction Corporation Limited )
  • தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு ( National Water Development Agency )
  • சர்தார் சரோவர் கட்டுமான ஆலோசனைக் குழு ( Sardar Sarovar Construction Advisory Committee )
  • அப்பர் யமுனை வாரியம் ( Upper Yamuna River Board )
  • WAPCOS லிமிடெட்

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்பு தொகு